ARTICLE AD BOX
ரிசரவ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ் பிரதமரின் இரண்டாவது முதன்மைச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அவரது தேர்வுக்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்தது, இதற்கான உத்தரவை பணியாளர் பயிற்சித் துறை (DoPT) சனிக்கிழமை பிறப்பித்தது. பி.கே. மிஸ்ரா செப்டம்பர் 11, 2019 முதல் பிரதமரின் முதன்மைச் செயலாளராக இருந்து வருகிறார்.
பிரதமரின் முதன்மை செயலாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களின் பதவிக்காலம்.
உத்தரவின்படி, தாஸின் நியமனம் "பிரதமரின் பதவிக் காலத்துடன் இணைந்து முடிவடையும் அல்லது மறு உத்தரவு வரும் வரை, எது முந்தையதோ அதுவரை" இருக்கும்.
1980-ம் ஆண்டு தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான தாஸ், டிசம்பர் 2018-ல் ரிசர்வ் வங்கி ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டு கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். மத்திய வங்கித் தலைவராக ஆறு ஆண்டுகள் பணியாற்றிய அவர், கோவிட்-19 தொற்றுநோய் போன்ற உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்ட பல சவால்களை எதிர்கொண்டார்.
ரிசர்வ் வங்கி ஆளுநராக, அமெரிக்காவை தளமாகக் கொண்ட குளோபல் ஃபைனான்ஸ் பத்திரிகையால், தாஸ் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் உலகளவில் முதல் மூன்று மத்திய வங்கியாளர்களில் ஒருவராகத் தரவரிசைப்படுத்தப்பட்டார். குளோபல் ஃபைனான்ஸ் சென்ட்ரல் பேங்கர் ரிப்போர்ட் கார்டுகள் 2024 இல் தாஸ் 'A+' மதிப்பீட்டைப் பெற்றார்.