ஆர்.சி.பி அணியால் வெளியேற்றப்பட்ட டூபிளெஸ்ஸிஸ்க்கு கவுரவம் வழங்கிய டெல்லி அணி – விவரம் இதோ

9 hours ago
ARTICLE AD BOX

கடந்த 2012-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமான பாப் டூபிளெஸ்ஸிஸ் 2015-ஆம் ஆண்டு வரை சிஎஸ்கே அணிக்காகவும் அதன் பின்னர் சிஎஸ்கே அணியானது தடை செய்யப்பட்ட இரண்டு ஆண்டுகள் புனே அணிக்காகவும், பின்னர் மீண்டும் சி.எஸ்.கே கம்பேக் கொடுத்ததிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை சிஎஸ்கே அணிக்காகவே விளையாடியிருந்தார்.

டூபிளெஸ்ஸிஸ்-க்கு டெல்லி கேபிட்டல்ஸ் வழங்கியுள்ள பதவி :

ஆனால் 2022-ஆம் ஆண்டின் போது சிஎஸ்கே அணி அவரை வெளியேற்றியதால் அதன் பின்னர் மூன்று ஆண்டுகள் பெங்களூரு அணியில் இடம் பிடித்து கேப்டனாகவும் விளையாடி வந்தார். அவரது தலைமையின் கீழ் பெங்களூரு அணி 2022, 2024 ஆண்டுகளில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியிருந்தது.

இருந்தாலும் அந்த அணியால் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. இதன் காரணமாக 40 வயதான அவரை ஆர்.சி.பி அணி மெகா ஏலத்திற்கு முன்னதாக கழட்டிவிட்டது. பின்னர் நடைபெற்ற மெகா ஏலத்தில் அவரை சி.எஸ்.கே அணி மீண்டும் தங்களது அணியில் தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவரை வாங்க சி.எஸ்.கே முன்வரவில்லை. அதேபோன்று ஆர்.சி.பி அணியும் அவரை வாங்க நினைக்கவில்லை. ஆனால் அவரை அடிப்படை தொகையான 2 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது வாங்கி இருந்தது. இந்த ஐபிஎல் தொடருக்கான டெல்லி அணியின் கேப்டன் ரேசில் முன்னிலையில் இருந்த கே.எல் ராகுல் கேப்டன் பதவி வேண்டாம் என்று கூறிவிட்டதால் அக்சர் பட்டேல் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

அதேவேளையில் முன்னாள் ஆர்.சி.பி கேப்டனான டூப்ளிசிஸ்க்கு தற்போது டெல்லி அணியின் நிர்வாகம் துணை கேப்டன் பதவியை வழங்கி கௌரவித்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட்டை பொறுத்தவரை இதுவரை 145 போட்டிகளில் விளையாடி 37 அரை சதங்களுடன் 4571 ரன்கள் குவித்திருக்கும் அனுபவ வீரரான அவருக்கு இந்த பதவியை வழங்கி டெல்லி கவுரவித்துள்ளது.

இதையும் படிங்க : 100-ஆவது டெஸ்ட் போட்டியோடு ரிட்டயர்டு ஆகலாம்னு தோனியை கூப்பிட்டேன்.. யாரும் அறியா நிகழ்வை – பகிர்ந்த அஷ்வின்

ஏற்கனவே சர்வதேச போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டனாக இருந்த அவர் ஐபிஎல் போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்டுள்ளதால் நிச்சயம் அவரது அனுபவம் அக்சர் பட்டேலுக்கு உதவும் என்பதனாலே இந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஆர்.சி.பி அணியால் வெளியேற்றப்பட்ட டூபிளெஸ்ஸிஸ்க்கு கவுரவம் வழங்கிய டெல்லி அணி – விவரம் இதோ appeared first on Cric Tamil.

Read Entire Article