ஆரோக்கியமான கண்களுக்கு 6 வைட்டமின்கள்

22 hours ago
ARTICLE AD BOX

ஒரு சீரான உணவு நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் முக்கியமானது மட்டுமல்ல, அதனால் உடலின் குறிப்பிட்ட உறுப்புகளும் பயன் பெற்று ஆரோக்கியமாக இருக்கும். உதாரணமாக, சில வைட்டமின்கள் கண்கள் மற்றும் பார்வை ஆரோக்கியத்தை ஆதரிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இங்கு குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான ஆறு வைட்டமின்களைப் பெறுவதில் அதிக கவனம் செலுத்தினால் நமது கண்கள் ஆரோக்கியமாக இருக்கும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்து.

வைட்டமின் A:

வைட்டமின் A, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இதயம், நுரையீரல் ஆகியவற்றின் வளர்ச்சியை ஆதரிக்கிறது. குறிப்பாக, வைட்டமின் A விழித்திரையில் நிறமிகளை உற்பத்தி செய்வதால், முழு அளவிலான ஒளியைப் பார்க்க உதவுகிறது. இது உங்கள் கண்கள் வறண்டு போகாமல் இருக்க உதவும்.

சால்மன், ப்ரோக்கோலி, முட்டை, கேரட் போன்ற உணவுகளில் வைட்டமின் A காணப்படுகிறது. கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது. கேரட்டில் (மற்றும் பிற பிரகாசமான நிறமுடைய பழங்கள் மற்றும் காய்கறிகளில்) பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது. இது உங்கள் உடலில் வைட்டமின் A தயாரிக்கப் பயன்படுத்தும் ஒரு கலவை ஆகும்.

வைட்டமின் C:

வைட்டமின் C சிட்ரஸ் பழங்கள், குடை மிளகாய் மற்றும் தக்காளி போன்ற உணவுகளில் காணப்படுகிறது. வைட்டமின் C, நம் கண்களை UV சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

அதிக நேரம் வெளியே கடும் வெயிலில் வேலை பார்ப்பவர்களுக்கு கண் சேதம் ஏற்படும் அபாயம் அதிகம். அதிக நேரம் வெயிலில் இருப்பது மீளமுடியாத சேதத்தை ஏற்படுத்தும். வைட்டமின் C, நம் கண்களின் லென்ஸை மேகமூட்டமாக மாற்றி அபாயத்தை குறைக்க வல்லமை பெற்றது என்பதே நிபுணரகளின் கருத்து. மேலும் வெயிலில் வேலை செய்யும் போது சன்கிளாஸ் மற்றும் தொப்பியை அணிவது நல்லது.

ஒமேகா - 3:

ஒமேகா-3 முக்கியமாக டுனா, சால்மன், கானாங்கெளுத்தி அல்லது ஹெர்ரிங் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களிலும், சில கொட்டைகள் மற்றும் விதைகளிலும் காணப்படுகின்றன.

உணவில் இந்த கொழுப்பு அமிலங்கள் போதுமான அளவு கிடைக்கவில்லை என்றால், கண்டிப்பாக அதற்குரிய suppliments-ஐயும் டாக்டரின் ஆலோசனைப்படி எடுத்து கொள்ள வேண்டும். இது வயது தொடர்பான கண் சிதைவையும், உலர் கண் நோயையும் தடுக்க உதவும்.

வைட்டமின் - E:

மற்றொரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியான வைட்டமின் E, நமது அனைத்து செல்கள் மற்றும் செல் செயல்பாடுகளுக்கும் இன்றியமையாதது.

இது புற்றுநோயை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து நம் உடலைப் பாதுகாக்க உதவுகிறது மற்றும் பார்வையில் முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் E கண் நோயை ஏற்படுத்தக்கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து விழித்திரையைப் பாதுகாக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
வைட்டமின்கள் உடல் நலனுக்கு அவசியம்தான்; ஆனால் அதுவே அளவுக்கு மீறினால்…!
6 Eye-healthy Vitamins

துத்தநாகம் (Zinc):

துத்தநாகம் உடலுக்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்து என்பதால் கிட்டத்தட்ட அனைத்து மல்டி வைட்டமின்களிலும் இது காணப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், காயங்களிலிருந்து உடல் விரைவாக குணமடையவும் பயன்படுகிறது. துத்தநாகம் கண் ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

துத்தநாகம், இறைச்சி, கொண்டைக்கடலை, பருப்பு வகைகள், பூசணி விதைகள், முந்திரி, பாதாம், முட்டை, சீஸ் மற்றும் பால் போன்ற உணவுகளில் அதிகமாக இருக்கும்.

லுடீன் மற்றும் ஸீயாக்சாந்தின் (Lutein and zeaxanthin):

லுடீன் மற்றும் ஸீயாக்சாந்தின் பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும் கரோட்டினாய்டுகள் ஆகும். இதை நாம் கீரை, பட்டாணி, ப்ரோக்கோலி, ஆரஞ்சு சாறு, சிவப்பு மிளகுத்தூள், தேன், முலாம்பழம் மற்றும் திராட்சை போன்ற உணவுகளிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

கரோட்டினாய்டுகள் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் மட்டும் அல்லாமல் கண் ஆரோக்கியத்திற்கும் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். அவை சேதத்தை ஏற்படுத்தக்கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து கண்களைப் பாதுகாக்கின்றன. லுடீன் மற்றும் ஸீயாக்சாந்தின் விழித்திரை சேதமடைவதைத் தடுப்பதில் முக்கிய பங்கை அளிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
கண்கள் துடித்தால் என்ன பலன்கள் தெரியுமா?
6 Eye-healthy Vitamins
Read Entire Article