ARTICLE AD BOX
புதுடெல்லி: டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் போட்டோக்கள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 2வது நாளாக நேற்றும் கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் அதிஷி, முன்னாள் அமைச்சர் கோபால் ராய் உள்பட 21 எம்எல்ஏக்களை வரும் 28-ம் தேதி வரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் விஜயேந்தர் குப்தா உத்தரவிட்டார். இதையடுத்து, ஆம் ஆத்மி எம்.எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்தில் அம்பேத்கரின் புகைப்படங்களை கையில் ஏந்தியபடி தர்ணாவில் ஈடுபட்டனர்.
The post ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் 21 பேர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.