ஆப்கான் அணியை இனிமே அப்படி சொல்லாதீங்க.. வேற மாதிரி பண்ணிட்டாங்க – சச்சின் வாழ்த்து

3 hours ago
ARTICLE AD BOX

நேற்று சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தான் அணி எட்டு ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. தற்போது இதற்கு இந்திய லெஜெண்ட் சச்சின் டெண்டுல்கர் ஆப்கானிஸ்தான் அணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்.

நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வாழ்வா சாவா போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்டன. இந்தப் போட்டியில் தோல்வியடையும் அணி தொடரை விட்டு வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான நிலையில் ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றது.

திரும்பிய 2023 உலகக் கோப்பை

2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் முதன்முறையாக இங்கிலாந்து அணிக்கு ஆப்கானிஸ்தான் அணி அதிர்ச்சி தோல்வியை கொடுத்தது. இந்தத் தோல்வியிலிருந்து மீள முடியாத இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது. இது மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் நடந்திருக்கிறது.

நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய அந்த அணிக்கு இப்ராஹீம் ஜட்ரன் 177 ரன்கள் குவித்தார். இதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தான அணி 325 ரன்கள் எடுத்தது. இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட் 120 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சில் ஓமர்சாய் அபாரமாக செயல்பட்டு 5 விக்கெட் கைப்பற்ற ஆப்கானிஸ்தான் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆப்கானை இனிமேல் அப்படி சொல்ல வேண்டாம்

ஆப்கானிஸ்தான் அணியின் இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு இந்திய லெஜெண்ட் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார். அவர் தன்னுடைய வாழ்த்தில் ஆப்கானிஸ்தான் அணியின் நிலையான செயல்பாடுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க : பாபர் உங்க டெக்னிக்கை இப்படி மாத்துங்க.. பாக் வீரர்களே விமர்சனம் செய்யுறப்போ.. ஆதரவு தரும் இந்திய ஜாம்பவான்

இது குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறும் பொழுது “சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணியின் நிலையான எழுச்சி ஊக்கமளிப்பதாக இருக்கிறது. இனி அந்த அணியின் வெற்றிகளை அப்செட் என்று கூற முடியாது. அவர்கள் வெற்றி பெறுவதை பழக்கமாக மாற்றி இருக்கிறார்கள். இப்ராஹிம் ஜட்ரனின் அற்புதமான சதம், ஓமர்சாய் ஐந்து விக்கெட் கைப்பற்றியது மிகவும் சிறப்பானது. இது ஆப்கானிஸ்தானுக்கு இன்னொரு மறக்க முடியாத வெற்றியை பரிசளித்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

The post ஆப்கான் அணியை இனிமே அப்படி சொல்லாதீங்க.. வேற மாதிரி பண்ணிட்டாங்க – சச்சின் வாழ்த்து appeared first on SwagsportsTamil.

Read Entire Article