ஆப்கானிஸ்தான் அணியை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது! ஏன்?

3 hours ago
ARTICLE AD BOX

ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது என்று சொல்வதே தவறான கூற்றாகும். ஏனெனில் ஆப்கானிஸ்தான் அணி இந்தியா, ஆஸ்திரேலியா போனற அணிகளுக்கு நிகராக பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் வலிமையுடன் உள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது? ஏன்?

சாம்பியன்ஸ் டிராபி தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் நேற்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்தை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியுள்ளது. இதன்மூலம் கிரிக்கெட் உலகில் நாங்களும் வலிமையான அணிதான் என மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி. இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது என்று சொல்வதே தவறான கூற்றாகும். 

ஏனெனில் ஆப்கானிஸ்தான் அணி இந்தியா, ஆஸ்திரேலியா போனற அணிகளுக்கு நிகராக வலிமையுடன் உள்ளது. பேட்டிங், பவுலிங்கில் முன்னணி அணிகளுக்கு சவால் அளிக்கும் வகையில் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக ஜோனதன் டிராட் உள்ளார். இங்கிலாந்து முன்னாள் வீரரான ஜோனதன் டிராட், ஆப்கானிஸ்தான் அணியை புதிய உச்சதுக்கு கொண்டு சென்றுள்ளார் என்று சொன்னால் அது மிகையல்ல.

ஆப்கானிஸ்தான் அணி

கடந்த 2023ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையில் இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆப்கானிஸ்தான் அணி, பாகிஸ்தானையும் 8 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்து இருந்தது. மேலும் இலங்கையையும் 7 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடி 5வது இடத்தை பிடித்திருந்தது. இதுமட்டுமின்றி 2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் பலம்வாய்ந்த ஆஸ்திரேலியாவை 21 ரன்கள் வீழ்த்திய ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தையும் எளிதில் சாய்த்துள்ளது.

இதனால் கிரிக்கெட் உலகில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என முன்னணி அணிகளுடன் ஆப்கானிஸ்தானும் இணைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆட்சி நடக்கிறது. அங்கு கிரிக்கெட் மைதானங்களும் இல்லை; ஆப்கானிஸ்தான் வீரர்கள் பயிற்சி எடுக்கும் வசதியும் இல்லை. ஆனாலும் ஆப்கான் வீரர்கள் மனம்தளராமல் இருப்பதை கையில் வைத்து உலக அரங்கில் அசத்தியுள்ளனர். 

Afghanistan vs England: இங்கிலாந்தை பந்தாடிய அதிரடி அசுரன்! யார் இந்த இப்ராஹிம் சத்ரான்?

ஜோனதன் டிராட்

''உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை மற்றும் இப்போது என்ன நடந்துள்ளது. மற்ற வீரர்களுக்கு நான் இதைச் சொல்கிறேன். ஆப்கானிஸ்தான் அணியை ஒருபோதும் எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்'' என்று ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் தெரிவித்துள்ளார்.

''நாங்கள் விளையாடும் ஒவ்வொரு ஆட்டமும் போட்டித்தன்மையுடன் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன், ஒவ்வொரு ஆட்டத்திலும் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆஸ்திரேலியாவை பலமுறை சாய்த்துள்ளோம். ஆகவே ஆஸ்திரேலியா எங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது'' என ஜோனதன் டிராட் கூறியுள்ளார். 

சாம்பியன்ஸ் டிராபி 2025

மேலும் பேசிய டிராட், ''நான் பயிற்சியாளராக இருந்ததிலிருந்து நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று முறை விளையாடியுள்ளோம். அந்த ஒவ்வொரு ஆட்டத்திலும் கடும் சவால் அளித்து இருக்கிறோம். இந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எங்களது வீரர்கள் தயாராக உள்ளனர்'' என்றார். 

"ஒரு அணியாக நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம், இந்த வெற்றியால் முழு தேசமும் மகிழ்ச்சியடைவார்கள் என்று நான் நம்புகிறேன். 2023 உலகக் கோப்பையில் நாங்கள் இங்கிலாந்தை முதன்முறையாக வீழ்த்தினோம். ஒரு அணியாக நாங்கள் நாளுக்கு நாள் முன்னேறி வருகிறோம் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன்.

கடந்த இரண்டு உலகக் கோப்பைகளில் நாங்கள் காட்டியது இதுதான். இன்று இது ஒரு பதட்டமான ஆட்டமாக இருந்தது, ஆனால் நாங்கள் அதை நன்றாகக் கட்டுப்படுத்தினோம். முடிவில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிடி கூறியுள்ளார். 

சாம்பியன்ஸ் டிராபி: ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு செல்லுமா? வாய்ப்பு எப்படி?

Read Entire Article