ARTICLE AD BOX
ஆப்கானிஸ்தானை வீழ்த்த ஆஸ்திரேலிய அணி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அந்த அணியின் மார்னஸ் லபுஷேன் பேசியுள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நாளை (பிப்ரவரி 28) நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. அரையிறுதிக்குத் தகுதி பெற இரு அணிகளுக்கும் இந்தப் போட்டி மிகவும் முக்கியமானதாகும்.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலக இதுவே பிரதான காரணம்: மிட்செல் ஸ்டார்க்
மார்னஸ் லபுஷேன் சொல்வதென்ன?
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மிக முக்கியமானப் போட்டியில் நாளை விளையாடவுள்ள நிலையில், மிடில் ஓவர்களில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவது அணியின் வெற்றிக்கு மிகவும் முக்கியம் என ஆஸ்திரேலிய வீரர் லபுஷேன் கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது அவர் பேசியதாவது: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட வேண்டும். போட்டியில் முதலில் பேட் செய்யும் நிலை ஏற்பட்டால், ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மிடில் ஓவர்களில் நாங்கள் நன்றாக செயல்பட வேண்டும். உண்மையில் அவர்களிடம் சுழற்பந்துவீச்சு மிகவும் வலுவாக உள்ளது.
இதையும் படிக்க: ஆப்கானிஸ்தானின் வெற்றிகளை இனி இப்படி கூற முடியாது; சச்சின் டெண்டுல்கர் கூறியதென்ன?
கடந்த சில போட்டிகளாக ஆப்கானிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர்களும் மிகவும் சிறப்பாக பந்துவீசுகிறார்கள். கடந்த போட்டியில் நூர் அகமது சிறப்பாக பந்துவீசினார். பந்துவீச்சாளர்கள் மட்டுமின்றி, ஆப்கானிஸ்தான் அணியில் சிறந்த பேட்டிங் வரிசையும் இருக்கிறது. அவர்களது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள். கடந்த முறை எங்களுக்கு எதிராக அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். அந்தப் போட்டியில் மேக்ஸ்வெல் அபாரமாக விளையாடி எங்களுக்கு வெற்றி பெற்றுத் தந்தார்.
ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக விளையாடுகிறது. அவர்கள் எவ்வாறு விளையாடுகிறார்கள் என்பதைப் பார்க்கிறோம். எங்களுக்கு எதிராக விளையாடுவதற்காக அவர்கள் நன்றாக தயாராகி வருவார்கள் என்றார்.