ARTICLE AD BOX

குஞ்சாகோ போபன் - பிரியாமணி நடித்துக்குள்ள 'ஆபீசர் ஆன் டூட்டி' திரைப்படத்தின் ஓடிடி அப்டேட் வெளியாகவுள்ளது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் குஞ்சாக்கோ போபன். இவரது நடிப்பில் கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி ஆபிஸர் ஆன் டியூட்டி திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தை அறிமுக இயக்குனரான ஜித்து அஷ்ரஃப் இயக்கியுள்ளார். குஞ்சக்கோ போபன் உடன் பிரியாமணி, ஜெகதீஷ் மற்றும் விஷாக் நாயர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவை கன்னூர் ஸ்குவாட் புகழ் ராபி வர்கீஸ் ரா, ஜேக்ஸ் பிஜாயின் இசை, மற்றும் படத்தொகுப்பை சமன் சாக்கோ மேற்கொண்டுள்ளனர்.
Puthiya officer etheetund, stand in line and salute 🫡
Watch Officer on Duty on Netflix, out 20 March in Malayalam, Hindi, Telugu, Tamil, Kannada#OfficerOnDutyOnNetflix pic.twitter.com/1Y8O7aK3ln
மலையாளத்தில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் திரைப்படத்தை தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு மக்களின் மனதையும் ஆஃபிசர் திரைப்படம் வென்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீசை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் மார்ச் 20 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.