ARTICLE AD BOX
ஆபத்தில் தேசம்; சட்ட ஒழுங்கை பராமரிக்க பங்களாதேஷ் ராணுவ தளபதி பொதுமக்களுக்கு வலியுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
பங்களாதேஷ் ராணுவத் தளபதி ஜெனரல் வக்கார்-உஸ்-ஜமான், நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
இதற்குக் காரணம் தொடர்ச்சியான அரசியல் கொந்தளிப்பு மற்றும் ஆழமடைந்து வரும் சமூகப் பிளவுகள் என்று கூறியுள்ளார்.
ஆயுதப்படை விழாவில் பேசிய அவர், உள்நாட்டு மோதல்கள் மற்றும் வன்முறை நாட்டின் இறையாண்மையை அச்சுறுத்துவதாக எச்சரித்தார்.
நாம் கண்ட இந்த அராஜகம் நாமே உருவாக்கியது என்று ஜெனரல் ஜமான் கூறினார்.
நீதித்துறை வழக்குகள் மற்றும் சிறைத்தண்டனைகள் காரணமாக காவல்துறை சரியாக செயல்படவில்லை எனக் குற்றம்சாட்டிய அவர், இதனால் நிலைத்தன்மையைப் பேணுவதற்கு ராணுவத்தின் மீது அதிக பொறுப்பு சுமத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.
ஆபரேஷன் டெவில் ஹன்ட்
வன்முறையை கட்டுப்படுத்த ஆபரேஷன் டெவில் ஹன்ட்
பங்களாதேஷில் சமீபத்திய மாதங்களில் வன்முறை, நாசவேலை மற்றும் கலவரம் அதிகரித்து வருகிறது. இதனால் பாதுகாப்புப் படைகள் ஆபரேஷன் டெவில் ஹன்ட் எனும் நடவடிக்கையைத் தொடங்கினர். இதன் மூலம் 8,600 பேர் கைது செய்யப்பட்டனர்.
முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம், இவர்க்ஜல் நாட்டை சீர்குலைக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியது.
கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாட்டிலிருந்து வெளியேறச் செய்த மாணவர் தலைமையிலான புரட்சி குறித்தும் ஜெனரல் ஜமான் கவலை தெரிவித்தார்.
ஷேக் ஹசீனா பதவி விலகியதிலிருந்து, ராணுவம் காவல்துறை போன்ற நீதித்துறை அதிகாரங்களை ஏற்றுக்கொண்டுள்ளது.
இது காணாமல் போனவர்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்தது.
தேர்தல்
தேர்தல் நடத்துவதற்காக சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம்
மீண்டும் மீண்டும் வன்முறை சுழற்சிகளைத் தடுக்க இதுபோன்ற வழக்குகள் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பொதுத் தேர்தல்கள் எதிர்பார்க்கப்படுவதால், சட்ட ஒழுங்கை மீட்டெடுக்க இடைக்கால அரசாங்கத்தின் முயற்சிகளை ஆதரிக்குமாறு ஜெனரல் ஜமான் பொதுமக்களை வலியுறுத்தினார்.
இதற்கிடையில், மாணவர் தலைவர் நஹித் இஸ்லாம் பிப்ரவரி 28 அன்று ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக அறிவித்து, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.