ஆனைமலை-கோட்டூர் சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

22 hours ago
ARTICLE AD BOX


பொள்ளாச்சி: ஆனைமலை-கோட்டூர் சாலை பல இடங்களில் மிகவும் வளைவாக இருப்பது வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், இந்த வழித்தடத்தில் பகல் நேரத்தில் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதில், ஆனைமலையிலிருந்து இந்திராநகரை கடந்து கோட்டூர் செல்லும் வழி சாலையில் சுமார் 10க்கும் மேற்பட்ட வளைவான பகுதிகள் உள்ளது. இந்த, வளைவான பகுதில் அடிக்கடி விபத்து நடப்பது வாடிக்கையாக உள்ளது. அந்த இடத்தில் ஒருசில இடங்களில் மட்டும் ரிப்லைக்ட் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அப்பகுதியில் வேகத்தடை அமைக்காமல் இருப்பதால், வளைவான சாலையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வருவோர், தடுமாறி விழும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மேலும், எதிரே விரைந்து வரும் வாகனத்தால் பிற வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே, ஆனைமலையிலிருந்து கோட்டூர் உள்ளிட்ட பிற பகுதிக்கு செல்லும், வாகன போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலையின் வளைவுகளில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆனைமலை-கோட்டூர் சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article