ARTICLE AD BOX
ஆந்திரப் பிரதேசத்தில் அடையாளம் தெரியாத பெண் இரு துண்டுகளாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசம் மாநிலம், அனகபள்ளி மாவட்டத்தில் பயாவரம் தேசிய நெடுஞ்சாலை அருகே அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமார் 35 முதல் 40 வயதுடைய அடையாளம் தெரியாத பெண்ணின் இடுப்பிலிருந்து கீழ்ப்பகுதியை துண்டாக வெட்டி, படுக்கை விரிப்பில் சுற்றிய நிலையில், பாலத்தின் அருகே மர்ம நபர்கள் வீசியுள்ளனர். மேலும், பெண்ணின் மறுபாதி உடலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம், தனிப்பட்ட தகராறு காரணமாகவா அல்லது வேறு ஏதேனும் குற்றத்துடன் தொடர்புடையதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: நாக்பூர் வன்முறை: 33 போலீஸார் காயம்! 50 பேர் கைது!