ARTICLE AD BOX
ஆதி, லக்ஷ்மி மேனன் நடிக்கும் சப்தம் படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகி உள்ளது.
நடிகர் ஆதி தமிழ் சினிமாவில் மிருகம், மரகத நாணயம் என பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அந்த வகையில் இவர், அறிவழகன் இயக்கத்தில் ஈரம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். சூப்பர் நேச்சுரல் திரில்லர் ஜானரில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து பல வருடங்கள் கழித்து அறிவழகன், ஆதி கூட்டணியில் சப்தம் எனும் புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஆதியுடன் இணைந்து லக்ஷ்மி மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோரம் நடித்துள்ளனர். இந்த படமும் ஈரம் படத்தை போல் ஹாரர் திரில்லரில் உருவாகி இருக்கும் நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது.
அதன்படி சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எனவே இப்படமானது வருகின்ற பிப்ரவரி 28 திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அடுத்தது இந்த படத்தை 7ஜி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இப்படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.