ARTICLE AD BOX
தேவாலய தேர் பவானியை முன்னிட்டு, தேரை அலங்கரிக்க எடுக்கப்பட்ட இரும்பு ஏணி 4 பேரின் உயிரை பறித்த சோகம் நடந்துள்ளது.
இதையும் படிங்க: மண்ணெண்ணெயை குளிர்பானம் என நினைத்து குடித்த சிறுவன் பரிதாப பலி.. பெற்றோர்களே கவனம்.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுக்கடை, இணையம், புத்தன்துறை மீனவ கிராமத்தில் தேவாலயம் உள்ளது. தேவாலயத்தில் கடந்த 15 நாட்களாக திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று தேர் பவனி நடைபெற திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், தேரை அலங்கரிக்கும் பணிகள் நேற்று நடைபெற்றது. அப்போது, ராட்சத ஏணியை 4 பேர் குழு நகர்த்தியது.
4 பேர் மரணம்
இவர்கள் உயர செல்லும் மின் கம்பியை மறந்துவிட்ட நிலையில், ஏணி நேரடியாக மின்சார கம்பியில் உரசியது. இதனால் இரும்பு ஏணியில் மின்சாரம் பாய்ந்து, அதனை நகர்த்திய அருள், மைக்கேல் உட்பட 4 பேரின் உடலில் மின்சாரம் பாய்ந்தது.
உடல் கருகி தீப்பிழம்பு ஏற்பட்டது. இதனைக்கண்டு அதிர்ந்துபோன நபர்கள் உடந்தையாக மின்சாரத்தை துண்டித்து நாள்வரை மீட்டனர். மருத்துவமனையில் அனுமதி செய்தபோது, அங்கு நால்வரும் உயிரிழந்தது தெரியவந்தது.
இதுதொடர்பான பதறவைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
Sensitive Visuals⚠️
மின்சாரம் தாக்கி 4 பேர் பரிதாப பலி
கன்னியாகுமரி மாவட்டம் இனயம் புத்தன்துறை அந்தோணியார் தேவாலய திருவிழாவில் அலங்கார பணிகளை மேற்கொண்டபோது உயரமான இரும்பு ஏணி உயரழுத்த மின்கம்பியில் சாய்ந்ததில் மின்சாரம் தாக்கி 4 மீனவர்கள் உயிரிழந்தனர். pic.twitter.com/mjsTGCOvzG
இதையும் படிங்க: கஞ்சா பழக்கத்தை அம்பலப்படுத்தியதால் ஆத்திரம்; 11ம் வகுப்பு மாணவர் மீது பள்ளி வளாகத்தில் தாக்குதல்., கொலை முயற்சி.!