ஆட்சிக்கலைப்பு எ என்று மிரட்டுகிறதா ஒன்றிய அரசு? பாஜக பொருளாளர் சொல்வது என்ன?

2 days ago
ARTICLE AD BOX

ஒன்றிய அரசு நிதி தராத நிலையில் , நாங்கள் வர தர மாட்டோம் என்று சொல்லுவதற்கு ஒரு நொடி போதும் ஆனால் கொடுத்து வாங்குவது தான் கூட்டாட்சி என்று கூறியிருந்தார்.

இதற்கு பாஜக தமிழ்நாடு பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஒன்றிய அரசு 356 விதியை பயன்படுத்த ஒரு நொடி போதும் என்று கூறியுள்ளார். மேலும் மாநிலங்களால் உருவானது இந்தியா அல்ல, இந்தியாவின் வசதிக்காக மாநிலங்கள் உருவாக்கப்பட்டது என்ற கருத்தையும் சேகர் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் அடாவடியாக பேசியுள்ளார். திமுக ஆட்சி இரண்டு முறை டிஸ்மிஸ் செய்யப்பட்டது. 356 விதி தேச விரோதத்திற்கு எதிராக செயல்படும் மாநில அரசுகளைக் கலைப்பதற்கு தான். மாநிலங்களை பிரிக்கவும் ஒன்றிய அரசுக்கு உரிமை உண்டு என்றும் கூறியுள்ளார்.

மும்மொழிக் கொள்கையில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் எல்லாம் ஒரே அணியில் திரண்டு இருக்கும் நிலையில் பாஜக தனித்து விடப்பட்டுள்ளது. மேலும் ஆட்சிக்கலைப்பு என்று பாஜக தலைவர்கள் பேசி வருவது மக்களை அக்கட்சிக்கு எதிராகத் தான் திருப்பும் என்பது கடந்தகால வரலாறு ஆகும்.

பாஜ ஆட்சி செய்யும் மகாராஷ்ட்ராவில் மராத்தி மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ள. மேற்கு வங்காள மாநில பாஜக தலைவர் வங்காள மொழியை இந்தியிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர்கள் மட்டுமே தாய்மொழிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரி கொடுக்க மாட்டேன் என்று ஒரு நொடியில் சொல்லி விடலாம்
தமிழக முதலமைச்சர்

356 ஐ ஒரு நொடியில் பயன்படுத்தி விடலாம் என்று

மத்திய அரசு சொன்னால் என்ன ஆகும்@dinamalarweb @dinathanthi @DDTamilNews @bbctamil @TOIIndiaNews @the_hindu pic.twitter.com/6hmXU7TuVr

— S.R.SEKHAR 🇮🇳 (@SRSekharBJP) February 22, 2025


 

Read Entire Article