ARTICLE AD BOX

‘எனது உள்ளத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்’ என கூறியுள்ளார் நடிகை மீனா. இது பற்றிய பனிப்போர்? பார்ப்போம்..
நடிகைகள் நயன்தாராவுக்கும் மீனாவுக்கும் இடையே நடந்த நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது. இது பற்றிக் காண்போம்..
சில நாட்களுக்கு முன்பு, மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை விழாவில், மீனாவை நயன்தாரா அவமரியாதையுடன் நடத்தியதாகவும், இதனால், அவர்களுக்குள் ஏதோ சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
புகழ்பெற்ற நடிகையான மீனா, சில ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழ் திரையுலகில் ரீ என்ரி கொடுத்தார். தற்போது இவர் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திலும் நடிக்கிறார்.
பூஜை விழாவில், படத்தில் உபயோகப்படுத்தப்படும் சூலாயுதத்தை மீனாவும் குஷ்புவும் நயன்தாராவிடம் கொடுத்தனர். அப்போது நயன் அவர்களின் முகத்தை பார்த்து சிரிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த விஷயம் முடிந்து சில நாட்களில், மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், நிறைய ஆடுகளுடன் இருக்கும் ஒரு சிங்கத்தின் போட்டோவை இணைத்திருக்கிறார். அதனுடன் ‘ஆடுகள் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறது என சிங்கம் கவலைப்படாது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இன்னொரு பதிவில், ‘உங்களது உள்ளத்தை மட்டும் நினைத்து பெருமைப்படுங்கள், அது அனைவரிடமும் இருக்காது’ என்று கூறியிருக்கிறார். நயன்தாரா தன்னிடம் நடந்துகொண்ட முறை சரியில்லாததை அவர் குறிப்பிடுவதாக சிலர் கூறி வருகின்றனர்.
The post ஆடுகளை பற்றி சிங்கம் கவலைப்படாது: நயன்தாரா செய்த அவமரியாதைக்கு, மீனாவின் பதிவு? appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.