ஆசிய கோப்பையில் 3 முறை மோதப்போகும் இந்தியா - பாகிஸ்தான்! வெளியானது அட்டவணை!

5 hours ago
ARTICLE AD BOX

பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சமீபத்தில் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தியது. விராட் கோலியின் சிறப்பான சதத்துடன் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பாகிஸ்தானை சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற்றி, இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டி மட்டுமின்றி கடைசியாக இந்தியா - பாகிஸ்தான் விளையாடிய போட்டிகளில் இந்திய அணியே அதிகம் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு மீண்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தான அணியில் மோத உள்ளது. அதுவும் டி20 ஃபார்மெட்டில் விளையாட உள்ளனர்.

மேலும் படிங்க: IPL 2025: இந்த ஆண்டு சேப்பாக்கம் இல்லை! மைதானத்தை மாற்றிய சிஎஸ்கே!

ஆசிய கோப்பை 2025 தொடர்

ஆசிய கோப்பை 20205 போட்டியில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த முறை ஒரு நாள் உலகக்கோப்பை நடைபெற இருந்ததால் 50 ஓவர் வடிவில் ஆசிய கோப்பை நடைபெற்றது. அடுத்த ஆண்டு 2026 ஐசிசி டி20 உலக கோப்பை நடைபெற உள்ளதால் இந்த ஆண்டு ஆசிய கோப்பை போட்டிகள் டி20 வடிவில் நடைபெற உள்ளது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 19 போட்டிகள் நடைபெற உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் தவிர இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் மற்றும் ஹாங்காங் ஆகிய எட்டு அணிகள் ஆசிய கோப்பை 2025ல் பங்கேற்க உள்ளன.

ஆசிய கோப்பை 2025 போட்டியில் இந்தியாவில் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இலங்கை அல்லது துபாயில் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் நடைபெற்றாலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியில் மட்டும் வேறு நாடுகளில் நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. காரணம் இந்த முறை நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்தியா பாகிஸ்தான் செல்லாது என்று திட்டவட்டமாக தெரிவித்தது. இதனால் 2031 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் நடைபெறும் எந்த ஒரு போட்டிக்கும் பாகிஸ்தான் வராது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.

இதனால் ஆசிய கோப்பை இந்தியாவில் நடத்தப்பட்டாலும், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் விளையாடும் போட்டிகள் மட்டும் இலங்கை மற்றும் துபாயில் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்திடம் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பேச்சுவார்த்தை நடத்தி மைதானங்களை முடிவு செய்யும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்னும் ஆசிய கோப்பைக்கான அட்டவணை வெளியாகவில்லை. மைதானங்கள் முடிவு செய்யப்பட்டு பின்னர் வெளியாகும் என்று கூறப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபி முடிந்த பிறகு ஐபிஎல், இங்கிலாந்து டெஸ்ட் தொடர், பங்களாதேஷ் தொடர் என இந்திய அணி வரிசையாக கிரிக்கெட் விளையாட உள்ளது.

மேலும் படிங்க: IND vs NZ: இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தியை இல்லாவிட்டால் பெரிய பிரச்னை - என்ன காரணம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article