"ஆங்கிலம் கற்று சிறப்பாக செயல்படும் தமிழர்கள்" பாராட்டி தள்ளிய சந்திரபாபு நாயுடு!

2 hours ago
ARTICLE AD BOX

மும்மொழி கொள்கை மூலம் இந்தி மொழி திணிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டுக்கு புகழாரம் சூட்டி பேசியுள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. ஆங்கிலம் கற்று வெளிநாட்டில் தமிழர்கள் சிறப்பாக செயல்படுவதாக சந்திரபாபு நாயுடு பாராட்டியுள்ளார்.

தமிழர்களுக்கு சந்திரபாபு நாயுடு பாராட்டு:

மத்திய பாஜக அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான், தமிழ்நாட்டிற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். இது, தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

தேசிய கல்வி கொள்கையின் மூலம் இந்தியை திணிக்க பாஜக முயற்சிப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு முன்வைத்தார். இதற்கு பாஜக கடுமையாக எதிர்வினை ஆற்றி வருகிறது. தேசிய கல்விக் கொள்கை மூலம் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்று கொள்ளலாம் என பாஜக தலைவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

ஆனால், ஆங்கிலம் தங்களுக்கு பல வாய்ப்புகளை உருவாக்கி தருவதாகவும் அதற்கு நேர்மாறாக இந்தி மொழி மற்ற மொழிகளை அழிப்பதாகவும் திமுக பதிலடி அளித்துள்ளது.

விஸ்வரூபம் எடுத்த மும்மொழி கொள்கை விவகாரம்:

இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு புகழாரம் சூட்டி பேசியுள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. ஆங்கிலம் கற்று வெளிநாட்டில் தமிழர்கள் சிறப்பாக செயல்படுவதாக சந்திரபாபு நாயுடு பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், "தமிழ்நாட்டில் இருந்து பலர் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்கின்றனர். அவர்கள் ஆங்கிலம் கற்று, மிகச் சிறப்பாக செயல்படுகின்றனர். அங்கு உயர் பதவிகளில் இருக்கும் பலர் தமிழர்கள்தான்.

ஐஏஸ் தேர்வுகளுக்கு பயிற்சி எடுக்க டெல்லி வருபவர்கள் அதிகம் பேர் தமிழர்கள்தான். பொதுவாக ஐஏஎஸ், ஐபிஎஸ் என்றால் அது தமிழ்நாடுதான் என்ற நிலை இருக்கும். தற்போது அவர்கள் சாதிக்க உலகம் முழுக்க பயணிக்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, மும்மொழி கொள்கை அமல்படுத்திய இந்திய பேசும் மாநிலங்களில் இரண்டாவது மொழி பேசுவோரின் எண்ணிக்கையே குறைவு என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல, இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலத்தை முதன்மை மொழியாக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில், ஆங்கிலமும் பேசும் தாய்மொழி தமிழ் பேசுபவர்களின் விகிதம் 1991 இல் 13.5% ஆக இருந்தது, இது 2011 இல் 18.5% ஆக உயர்ந்தது.

இதையும் படிக்க: Tamil 3rd Language: ”தமிழ்” மொழிக்கு சிறப்பு அந்தஸ்து..! நாடு முழுவதும் பறந்த கடிதம், மூன்றாவது பொதுமொழியாகும் செம்மொழி?

Read Entire Article