ஆக்ஸ்போர்டு பல்கலையில் உரையாற்றும் முதல்வர் மமதா!

10 hours ago
ARTICLE AD BOX

லண்டனிலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்கு வங்கத்தின் முதல்வர் மமதா பானர்ஜி உரையாற்றவுள்ளார்.

பிரிட்டனின் வரலாற்று சிறப்புமிக்க கல்வி நிறுவனமான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்கு வங்கத்தின் முதல்வர் மமதா பானர்ஜி உரையாற்றவுள்ளார். இதற்கான, அழைப்பு கடந்த 2024 ஆம் ஆண்டில் முதல்வரின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில் அவர் இந்த மாதம் (மார்ச்) அங்கு சென்று உரையாற்றவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வெளியான தகவலில் முதல்வர் மமதா வருகின்ற மார்ச் 21 அன்று விமானம் மூலமாக கொல்கத்தாவிலிருந்து துபைக்கு சென்று அங்கிருந்து லண்டன் நகரத்துக்கு செல்லவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள அவரது சொற்பொழிவின் தலைப்பு குறித்த தகவல்கள் தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை.

இதையும் படிக்க: இ-மெயில் மோசடி வழக்கில் நைஜீரியரை கைது செய்த சிபிஐ!

இதனைத் தொடர்ந்து, அவர் பிரிட்டனில் மேலும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளதாகவும், மேற்கு வங்கத்தில் முதலீடு செய்ய விரும்பும் அந்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர்களை சந்தித்து பேசவுள்ளதாகவும் மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2021 ஆம் ஆண்டே ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்ற முதல்வர் மமதாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நிகழ்ச்சியானது மத்திய அரசின் ரகசிய முயற்சியால் ரத்து செய்யப்பட்டதாக அவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article