ஆக்ராவில் இருசக்கர வாகனங்கள் மோதல்: 5 பேர் பலி

20 hours ago
ARTICLE AD BOX

ஆக்ராவில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் பலியாகினர்.

உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் சனிக்கிழமை இரவு நான்கு பேரை ஏற்றிச் சென்ற இருசக்கர வாகனம் மற்றொரு இருசக்கர வாகனமான புல்லட் மீது மோதியது.

இந்த சம்பவத்தில் 5 பேர் பலியானார்கள். அதே நேரத்தில் புல்லட்டை ஓட்டிவந்த 17 வயதான கரணுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன.

புல்லட்டில் வந்த மற்றொருவரான கிஷன்வீர் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

ரஷியாவுக்குச் செல்லுங்கள்! அமெரிக்காவில் ஜே.டி. வான்ஸுக்கு எதிர்ப்பு!

நான்கு பேரும் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​​​அது புல்லட் மீது மோதியது என்று இறந்தவர்களில் ஒருவரின் உறவினர் ராம் லகான் கூறினார்.

ககரோல் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ்வீர் சிங், "விபத்தில் 5 பேர் பலியானார்கள். அவர்களின் உடல்கள் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

காயமடைந்தவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

Read Entire Article