ARTICLE AD BOX
பத்ம விருதுக்கு தேர்வாகியுள்ள கிரிக்கெட் வீரர் அஸ்வின், நடிகர் அஜித்குமாருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களுள் ஒருவராகத் திகழ்ந்து, தனது பல்வேறு சாதனைகளால் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாட்டின் உயரிய குடிமக்கள் விருதுகளுள் ஒன்றான "பத்ம பூஷன்" விருது பெறத் தேர்வாகியுள்ள தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர், கலை, விளையாட்டு, ட்ரோன் வடிவமைப்பு என பல்துறைகளில் தனக்கென தனிமுத்திரை பதித்துள்ள அஜித்குமாருக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
இன்னும் பல சிகரங்களைத் தொட்டு, நம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் மென்மேலும் புகழ் சேர்க்க வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிய சிலுவைபுரம் கிராம மக்கள்!
சமூகப் பணி, பொது விவகாரம், அறிவியல் மற்றும் பொறியியல் துறை, மருத்துவம், இலக்கியம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை ஆற்றிய 139 பேருக்கு நாட்டின் உயரிய பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நிகழாண்டில் 7 போ் பத்ம விபூஷண் விருதுக்கும், 19 போ் பத்ம பூஷண் விருதுக்கும், 113 போ் பத்மஸ்ரீ விருதுக்கும் தோ்வாகியுள்ளனா்.
தமிழகத்தில் நடிகா் அஜித் குமாா், நடிகை ஷோபனா, நல்லி குப்புசாமி செட்டி ஆகிய மூவருக்கு பத்ம பூஷண் விருதும், பாரதி ஆய்வாளா் சீனி விஸ்வநாதன் உள்பட 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் என மொத்தம் 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.