ARTICLE AD BOX
பாஜக, திமுக கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளரும், லாட்டரி அதிபரின் மருமகனுமான ஆதவ் அர்ஜூனா. இந்நிலையில் ஆதவ் அர்ஜூனாவின் காதல் மனைவியும், மார்டினின் மகளுமான டெய்சி வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெய்சி மாடலிங்றையில் ஆடை வடிவமைப்பாளராக சர்வதேச அளவில் பிரபலமாக இருந்து வருகிறார். இந்நிலையில் டெய்சி, தனது இன்ஸ்ட்ராகிராம் பதிவில், ”நான் டெய்சி. நானும், ஆதவ் அர்ஜுனாவும் எப்போதும் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும், தொழில்முறை வாழ்க்கையையும் தனித்தனியாக வைத்திருக்க விரும்புகிறோம் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து தொழில்முறை, அரசியல் முடிவுகளும், நிலைப்பாடுகளும் சுயாதீனமாக எடுக்கப்படுகின்றன.
மேலும் இதற்கும் எங்கள் குடும்பத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த அறிவிப்பு, ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் எங்கள் ஈடுபாடு குறித்து பரப்பப்படும் அனைத்து தவறான தகவல்கள், ஊகங்கள், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நாங்கள் இருவரும் தனித்துவமான வேலை, வாழ்க்கைகளைக் கொண்ட தனித்துவமான கருத்துக்களைக் கொண்டுள்ளோம்.
நாங்கள் ஒருவருக்கொருவர் தனியுரிமை, அவரவர் கருத்துக்களை மதிக்கிறோம். எங்களைப்பற்றி வேறுவிதமாக எந்தவொரு தவறான கருத்துக்களை கூறுவதை நாங்கள் எதிர்க்கிறோம். எங்கள் பரஸ்பர நலனுக்காக, எங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நலம் விரும்பிகள் எங்கள் குடும்பத்தை ஒருவருக்கொருவர் தொழில்முறை மற்றும் பொது வாழ்க்கையில் சிக்க வைப்பதைத் தவிர்க்குமாறு மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.