ARTICLE AD BOX
அவமானப்படுத்தி அனுப்பிய டிரம்ப்! நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட ஜெலன்ஸ்கி!
கீவ்: வெள்ளை மாளிகையில் வைத்து, ஜெலன்ஸ்கியை டிரம்ப் அவமானப்படுத்தியிருந்தார். இந்நிலையில், அமெரிக்காவின் உதவிக்கு நன்றி தெரிவித்து ஜெலன்ஸ்கி வீடியோ வெளியிட்டிருக்கிறார்
இருவருக்கும் இடையே நடந்த வார்த்தை மோதல் சர்வதேச அளவில் பெரும் விவாதங்களை கிளப்பியிருந்தது. இந்நிலையில், ஜெலன்ஸ்கியின் வீடியோ கவனம் பெற்றிருக்கிறது.

வீடியோவில், "அமெரிக்காவின் முக்கியத்துவத்தை நாங்க புரிஞ்சுக்குறோம். இதுவரை எங்களுக்கு செய்த உதவிக்கு நாங்க நன்றி கடன் பட்டிருகிறோம். அமெரிக்கா மீதான நன்றி உணர்வை உணராத நாள் இல்லை. எங்களின் சுதந்திரத்தை பாதுகாத்ததற்கான நன்றி உணர்வு இது. இது ஒரு முக்கிய பிரச்சனை. இதற்காக அனைவரும் ஒன்றுபட்டிருக்கின்றனர். எங்களுக்கு அமைதிக்கான உத்தரவாதம் தேவை. ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் இதைத்தான் விரும்புகின்றன. துருக்கி வரை இந்த கோரிக்கைதான் எதிரொலிக்கிறது" என்று கூறியுள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போர் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இரு தரப்பிலும் கடுமையான உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. போரை நிறுத்த வேண்டும் என்று ரஷ்யாவே வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் ஜெலன்ஸ்கி போரை நிறுத்த விரும்பவில்லை. ஏற்கெனவே ஜெலன்ஸ்கியின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. போர் காரணமாக தேர்தல் நடத்தாமல் அவர் பதவியில் தொடர்ந்து வருகிறார். போரை நிறுத்தினால் தேர்தல் நடக்கும்.
இன்றைய தேதியில் உக்ரைனின் 20% நிலம் ரஷ்யா வசம் இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் வெவ்வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். இதையெல்லாம் வைத்து பார்த்தால் ஜெலன்ஸ்கி தேர்தலில் ஜெயிக்க முடியாது.
மறுபுறம் ரஷ்யாவை வரவழைத்து அரபு நாட்டில் வைத்து போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா பேசியிருக்கிறது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், ஜெலன்ஸ்கி இதற்கு மறுப்பு தெரிவித்தது சலசலப்பை கிளப்பியிருந்தது. இதனையடுத்து ஜெலன்ஸ்கியை அமெரிக்கா அழைத்திருந்தது. வெள்ளை மாளிகையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் இது தொடர்பாக கலந்துரையாடல் நடந்தது. டிரம்ப்பின் பேச்சுக்கு ஜெலன்ஸ்கி பிடி கொடுக்காததால், டிரம்ப் திட்டிவிட்டார்.
உலகம் முழுவதும் இந்த வீடியோ பரவலாக ஷேராகி விவாதங்களை கிளப்பியது. "உனக்கும் உன் நாட்டுக்கும் நாங்கள் எவ்வளவு உதவி செஞ்சி இருப்போம்? ஆனா இதைப்பத்தி நீ கொஞ்சமாவது யோசிச்சியா? நன்றி இருக்கா?" என நறுக்கென டிரம்ப் கேட்டுவிட்டார். அவரது கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக தற்போது ஜெலன்ஸ்கி வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
எது எப்படியோ இந்த போரில் ஜெயித்தது அமெரிக்காதான். சீனாவை சமாளிக்க முடியாமல் பொருளாதார சுழலில் அமெரிக்கா சிக்கியிருந்தது. இதிலிருந்து வெளியே வர பெரிய அளவில் பணம் தேவைப்பட்டது. ஆனால் அதை எங்கிருந்து பெறுவது என தெரியமல் டிரம்ப் முழித்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் ஜெலன்ஸ்கி வந்து சிக்கிக்கொண்டார்.
அதாவது உக்ரைனுக்கு இதுவரை செய்த செலவுகளுக்கு ஈடாக, அந்நாட்டில் உள்ள கனிமவளங்களில் பாதியை தனக்கு கொடுக்குமாறு டிரம்ப் கேட்டிருக்கிறார். இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.