'அழகா இருக்கீங்க' என மெசேஜ் அனுப்புவது ஆபாசம்தான்! அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

3 days ago
ARTICLE AD BOX

'அழகா இருக்கீங்க' என மெசேஜ் அனுப்புவது ஆபாசம்தான்! அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

Mumbai
oi-Halley Karthik
Subscribe to Oneindia Tamil

மும்பை: முன்பின் தெரியாத பெண்ணுக்கு நள்ளிரவில், 'நீ அழகாக இருக்கிறாய்' என்றும், 'உன்னை பிடித்திருக்கிறது' எனவும் மெசேஜ் அனுப்புவது ஆபாசம் என்று மும்பை நீதிமன்றம் கூறியுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த உத்தரவு, பெரும் கவனம் பெற்றிருக்கிறது.

crime police

மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், தன்மீதான பாலியல் குற்ற தண்டனையை நீக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த 18ம் தேதி கூடுதல் அமர்வு நீதிபதி (திண்டோஷி) டிஜி தோப்ளே முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் வாதங்களை முன்வைத்த வழக்கறிஞர், "எனது மனுதாரர் அரசியல் நோக்கங்களுக்காக பாலியல் குற்றவாளியாக மாற்றப்பட்டிருக்கிறார். எனவே அவருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்ய வேண்டும்" என்று கோரியிருந்தார். ஆனால், பாதிக்கப்பட்ட பெண் தரப்பிலிருந்து இந்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அதாவது, "தனக்கு நள்ளிரவில், 'ஹாய் நீங்கள் ஸ்மார்ட்டாக இருக்கிறீர்கள். ஸ்லிம்மாகவும், அழகாகவும்கூட இருக்கிறீர்கள். எனக்கு உங்களை பிடித்திருக்கிறது' என்று வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் வந்திருக்கிறது. இதை அனுப்பிய நபருக்கும் எனக்கும் இதற்கு முன்னர் எந்த தொடர்பும் இருந்தது கிடையாது. முகம் தெரியாத நபரிடமிருந்து இப்படி மெசேஜ் வருவதை நான் விரும்பவில்லை. இது ஆபாசமானதாக இருக்கிறது. இதுவும் பாலியல் சீண்டல்தான். எனவே குற்றம்சாட்டப்பட்டவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கூடாது" என்று கூறியுள்ளார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "சமகாலத்தில் சமூகத்தின் தரம் எப்படி இருக்கிறது? அதை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை கொண்டு
ஆபாசத்தை மதிப்பிட வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட நபர், இரவு 11 மணிக்கு தொடங்கி 12.30 வரை பல மெசேஜ்களை அனுப்பியிருக்கிறார். புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார். அதில், திருமணம் குறித்தும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தோற்றம் குறித்தும் விசாரித்திருக்கிறார்.

இப்படியான மெசேஜ்களை அப்பெண்ணும் சரி அவரது கணவரும் சரி ஏற்க மாட்டார்கள். அதிலும் யார் என்றே தெரியாத நபரிடமிருந்து வரும் மெசேஜ்களை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். மட்டுமல்லாது குற்றம்சாட்டப்பட்டவருக்கும், பாதிக்கப்பட்டவருக்கும் இடையில் எந்த உறவும் இல்லை என்பதும் தெளிவாக தெரிகிறது" என்று கூறி, நள்ளிரவில் இப்படி மெசேஜ் அனுப்புவது ஆபாசம்தான் என உத்தரவிட்டிருக்கிறார்.

இந்த குற்றத்திற்காக கீழமை நீதிமன்றம் வழங்கிய 3 மாத சிறை தண்டனை தீர்ப்பு சரி என்றும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார். மட்டுமல்லாது இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் வைக்கப்படும் வாதங்களில் உண்மை இல்லை. அரசியல் காரணங்களுக்காக எந்த பெண்ணாவது தன்னுடைய கண்ணியத்தை அடகு வைப்பார்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

More From
Prev
Next
English summary
Sending messages to an unknown woman at midnight, saying "You are beautiful" and "I like you," is considered obscene, according to a ruling by the Mumbai court. As crimes against women continue to rise, this verdict has gained significant attention.
Read Entire Article