ARTICLE AD BOX
ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அங்கிருந்து விஜயை வைத்து தொடர்ந்து மூன்று திரைப்படங்களை இயக்கி வாகை சூடினார். தெறி மெர்சல் மற்றும் பிகில் என இந்த மூன்று திரைப்படங்களும், பல திரைப்படங்களின் காப்பி என விமர்சனம் முன்வைக்கப்பட்டாலும் அது வசூலை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.
இந்த நான்கு திரைப்படங்களுக்கு பிறகு திடீரென பாலிவுட் உலகுக்கு பயணமானார் அட்லீ. அங்கு ஷாருக்கானுடன் இணைந்து அவர் ஜவான் திரைப்படத்தை கொடுத்தார். இங்கிருந்து நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரையும் அவர் அழைத்துச் சென்றார். இதில் விஜய் சேதுபதிக்கு வில்லன் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் அது சொல்லிக் கொள்ளும் வகையில் அமையவில்லை என்பதே பலர் கருத்தாகவும் இருந்தது. இதே போல் நயன்தாரா கதாநாயகியாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும், சில காட்சிகளுக்கு வந்து போன தீபிகா படுகோனுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்ததாக பலரும் கூறினார்கள். இருப்பினும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் ஈட்டி அந்த திரைப்படம் சாதனை படைத்தது.
அதுவும் தமிழில் இருந்து சென்ற ஒரு இயக்குனர் அங்கு ஆயிரம் கோடி ரூபாய் வசூலுக்கு சொந்தமான திரைப்படத்தை இயக்கியதால், பலரது பாராட்டையும் பெற்றார். இதன் பிறகு, இந்தி திரை உலகிலேயே செட்டில் ஆன அட்லி, அங்கு ஒரு திரைப்படத்தை தயாரித்தார். அது வேறு எதுவும் இல்லை அவர் ஏற்கனவே இயக்கிய தெறி திரைப்படத்தின், ரீமேக் தான்.
வருண் தவான் கதாநாயகனாகவும் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடித்திருந்த திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. இப்படியான சூழலில் மீண்டும் தனது இயக்கத்தின் பக்கம் கவனம் திருப்பி இருக்கிறார் அட்லி. அவர் ஏற்கனவே சல்மான் கானை வைத்து ஒரு திரைப்படம் இயக்குவதாகதான் இருந்தது. ஆனால் தற்போது திடீரென அந்த ப்ராஜெக்ட் தள்ளிப் போய் இருக்கிறது.
இப்படியான சூழலில் அவர் அடுத்ததாக அல்லு அர்ஜுனுடன் இணைய இருக்கிறார். நேரடி தெலுங்கு திரைப்படமாக இது எடுக்கப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் இளம் இசை அமைப்பாளர் சாய் அபயங்கர். இதேபோல் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதாக தகவல் கசிந்து உள்ளது. விரைவில் சூட்டிங் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
The post அல்லு அர்ஜுன் உடன் அட்லி இணையும் திரைப்படத்தில் அவர்தான் ஹீரோயினா… சரியா போச்சு போங்க… appeared first on cinema.cricglitz.com.