ARTICLE AD BOX
அறுபதிலும் ஆசை வரும்.. அப்போ க்ரே டைவர்ஸ்.. இப்போ க்ரே மேரேஜ் டிரெண்டிங்கா?.. அமீர்கான் சம்பவம்!
மும்பை: கடந்த 2021ம் ஆண்டு அமீர்கான் தனது 2வது மனைவியான கிரண் ராவை விவாகரத்து செய்தார். ஒட்டுமொத்த திரையுலகமே இந்த வயதில் அமீர்கான் ஏன் விவாகரத்து செய்தார் என்கிற கேள்விகளை கடந்து அமீர்கானின் அடுத்த காதலி யார் என்கிற தேடுதல் தான் அதிகரித்து இருந்தது. பாலிவுட்டின் இளம் நடிகை பாத்திமா சனா ஷேக் பெயர் தான் பாவம் சிக்கியது.
இந்த முறையாவது இஸ்லாமிய பெண்ணை அமீர்கான் காதலிக்கிறாரா என்று பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் அவர் இந்து பெண்ணையே காதலித்து வருவது தற்போது தெரிய வந்து வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ரீனா தத்தா, கிரண் ராவை தொடர்ந்து கெளரி ஸ்ப்ராட் எனும் பெங்களூருவை சேர்ந்த பெண்ணை அமீர்கான் காதலித்து வருகிறார் என்கின்றனர்.

2021ம் ஆண்டு அமீர்கான் விவகாரத்து செய்ததும் இந்தியாவில் க்ரே டைவர்ஸ் கலாச்சாரம் திடீரென டிரெண்டாக தொடங்கியது. தொடர்ந்து நாடு முழுவதும் பல பிரபலங்கள் தங்கள் ஜோடிகளை பிரிய ஆரம்பித்தனர். இந்நிலையில், க்ரே மேரேஜ் டிரெண்டிங்கையும் விரைவில் அமீர்கான் ஆரம்பித்து வைப்பார் என தெரிகிறது.
க்ரே டைவர்ஸ்: வயதாகி தலைமுடி எல்லாம் நரைத்த பின்னர் கணவனும் மனைவியும் இதுக்கு மேல நாம் இருவரும் சேர்ந்து வாழ வேண்டாம் என்கிற முடிவை எடுத்து ஒருவரை ஒருவர் பிரிந்து தனித்தனியாக வாழ்க்கையை தேடிச் செல்வது தான் க்ரே டைவர்ஸ். அமீர்கான் அதை ஆரம்பித்து வைத்தார் என்றும் தொடர்ந்து பல பிரபலங்கள் விவாகரத்து செய்து பிரிய அவர் தான் காரணம் என்றும் கூறப்பட்டது.

சமந்தா முதல் தனுஷ் வரை: அமீர்கான் நடிப்பில் வெளியான லால் சிங் சத்தா எனும் பாலிவுட் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நாக சைதன்யா சமந்தாவை விவாகரத்து செய்து பிரிந்தது பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருமணமாகி 4 ஆண்டுகளிலே இருவரும் பிரிந்து விட்டனர். சோபிதா துலிபாலாவை காதலித்த நிலையில் தான் அவர் சமந்தாவை பிரிந்தார் என்பது பின்னர் தெரிய வந்தது. தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் 17 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தனர். ரவி மோகன் தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிந்தார். ஏ.ஆர். ரஹ்மான் 31 வருட திருமண பந்தத்தில் இருந்து விலகியதும் க்ரே டைவர்ஸ் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்தது.

க்ரே மேரேஜ் டிரெண்ட் தொடங்குமா?: 60வது பிறந்தநாள் விழாவில் அமீர்கானின் புதிய காதலி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியா முழுவதும் தற்போது டாப் டிரெண்டிங்கில் கெளரி ஸ்ப்ராட் (Gauri Spratt) தான் உள்ளார். பிறந்தநாள் விழா முடிந்து கூடிய விரைவிலேயே அமீர்கான் கெளரியை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், க்ரே மேரேஜையும் அமீர்கான் டிரெண்ட் செய்து வைப்பாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. வயதான காலத்தில் இணையை பிரிந்த பிரபலங்களும் வரிசையாக தங்கள் புதிய ஜோடிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த பயம் இருக்கா?: ஒருவரை விவாகரத்து செய்த உடனே தனது அடுத்த ஜோடியை அறிவிக்கும் அளவுக்கு இன்னமும் இந்தியாவில் சினிமா பிரபலங்களே இல்லை என்கிற நிலைதான் தெளிவாக தெரிகிறது. சில ஆண்டுகள் ரகசியமாக வாழ்ந்த பின்னர் தான் பொதுவெளிக்கு புதிய காதல் கதைகள் எல்லாம் அம்பலமாகி வரும் நிலையில், மக்கள் மீதும் மீடியா மீதும் பிரபலங்களுக்கு இருக்கும் அச்சம் தான் இதற்கு காரணம் என்கின்றனர்.