அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்ளும் வாய்ப்பு யாருக்கு?

3 hours ago
ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் டிராபி தொடர் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் அரையிறுதியில் இந்திய அணி யாருடன் விளையாடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குரூப் - ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் போட்டியில் இருந்து வெளியேறிவிட்டன. இந்த நிலையில், குரூப் பி பிரிவில் இங்கிலாந்து அணி வெளியேறிவிட்டதால், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிதான் இடையே அரையிறுதிக்கு முன்னேறுவதில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதனால், இந்தியாவுடன் யார் அரையிறுதியில் விளையாடப் போகிறது என்ற சந்தேகமும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

குரூப்-பி பிரிவில் தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தையும், ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தானையும் எதிர்கொள்ளவிருக்கிறது.

அரையிறுதி வாய்ப்பு எப்படி?

  • ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இரு அணிகளும் வெற்றிபெற்றால் இரு அணிகளும் அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிடும்.

  • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தால், தென்னாப்பிரிக்கா முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும்

  • ஒருவேளை ஆஸ்திரேலியா தோற்றாலும், இங்கிலாந்து அணியின் வெற்றி மற்றும் ரன் ரேட்டைப் பொறுத்து தீர்மானிக்கப்படும்.

  • தென்னாப்பிரிக்க அணி(+2.140) ஆஸ்திரேலியாவைவிட(+0.475) அதிகளவில் ரன்ரேட்டை வைத்திருப்பது அந்த அணிக்கு வலிமையாக பார்க்கப்படுகிறது.

மார்ச் 2 ஆம் தேதி நடைபெறும் இந்தியா - நியூசிலாந்து அணி யார் முதலிடத்தைப் பிடிக்கப் போவது என்ற அடிப்படையில் நடக்கவிருக்கிறது.

இந்தியாவுடன் மோதும் அணி எது?

  • ஒரு வேளை இந்திய அணி முதலிடத்தைப் பிடிக்கும் பட்சத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றால், இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும்.

  • மறுபுறம், ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, தென்னாப்பிரிக்கா இங்கிலாந்தை வென்றால், குழுவில் முதலிடத்தில் இருந்தால் இந்தியா ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ளும்.

  • இந்தியா நியூசிலாந்திடம் தோற்றால், இந்த குறிப்பிட்ட சூழ்நிலையில் அவர்கள் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும்.

  • தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இரண்டும் தங்கள் போட்டிகளில் தோல்வியடைந்து, இந்திய அணி இரண்டாவது இடத்தைப் பிடித்தால் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ளும்.

  • இந்த சூழ்நிலையில், நியூசிலாந்திற்கு எதிரான இந்தியாவின் வெற்றி, ரன்ரேட்டின் அடிப்படையில் குரூப்-பி இல் எந்த அணி இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என்பதைப் பொறுத்து தென்னாப்பிரிக்கா/ ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டி அமையும்.

Read Entire Article