ARTICLE AD BOX
அருண் விஜயின் வணங்கான் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் அருண் விஜய் தற்போது ரெட்ட தல எனும் திரைப்படத்தை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர், பாலா இயக்கத்தில் வணங்கான் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க இதன் பின்னணி இசைக்கான பணிகளை சாம் சி எஸ் கவனித்திருந்தார். இந்த படத்தில் அருண் விஜயுடன் இணைந்து மிஸ்கின், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, ரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் அருண் விஜய் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளியாக நடித்திருந்தார். அதன்படி பாலாவின் வண்ணத்தில் தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்றுள்ளார். அதாவது தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்ப உடல் மொழியையும் வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியபடுத்தி இருந்தார் அருண் விஜய். அதேபோல் அருண் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்த ரிதாவும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருந்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் பிரச்சனையை மற்றொரு மாற்றுத்திறனாளியால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்ற விஷயத்தை தனது திரைக்கதையின் மூலம் மிக ஆழமாக தெளிவுபடுத்தி இருந்தார் பாலா. இந்த படம் கடந்த ஜனவரி 10 அன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டுவரப்பட்டது. ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் இப்படம் இன்று (பிப்ரவரி 21) அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது.