அரிசியில் வண்டு வைக்கிறதா இந்த ஒரு பொருளை கலந்து பாருங்க வரிசையில் வண்டு பிடிக்காது…!!

6 days ago
ARTICLE AD BOX

அரிசி மற்றும் பருப்பில் புழு பூச்சிகளை விரட்ட வேப்ப இலை கிராம்பு, பூண்டு தீப்பெட்டி போன்ற பொருட்களை பயன்படுத்தி எளிதாக சுத்தம் செய்யலாம்…

மளிகை கடையில் இருந்து அதிகமாக அரிசியை வாங்குகிறீர்களா? எவ்வளவு சுத்தம் செய்தாலும் அந்த புழுக்கள் போகவில்லையா இப்போது இது போன்ற பிடிவாதமான புழு மற்றும் பூச்சிகளை எளிதாக விரட்டி அடிப்பது சுலபம்தான். அரிசி மற்றும் பருப்பை இந்த ட்ரிக் மூலம் எளிதாக சுத்தம் செய்யலாம் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்வது வழக்கமான ஒன்றுதான் ஆனால் இவ்வாறு சேமித்து வைக்கும் பொருட்களில் குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் வண்டுகள் மற்றும் புழுக்கள் உருவாக ஆரம்பித்து விடும்…

குறிப்பாக அரிசி மற்றும் பருப்பு போன்றவற்றில் இவ்வாறு புழுக்களின் தாக்கம் அதிகமாக இருக்கும் மேலும் நம் வீட்டில் பாட்டி அம்மா ஆகியோர் மிகவும் கஷ்டப்பட்டு அரிசியில் உள்ள பூச்சிகளை அகற்றுவார்கள் ஆனால் அந்த பூச்சிகள் மறையவில்லை என்றால் நமக்கு தொந்தரவாக இருக்கும். இதனை வீட்டில் கிடைக்கக்கூடிய சில பொருட்களைக் கொண்டு கட்டுப்படுத்தலாம்..

முதலில் வேப்ப இலைகளை எடுத்து ஒரு மூட்டையாக கட்டவும் இப்போது அதை அரிசி சேமித்து வைத்திருக்கும் பாத்திரத்தில் வைத்து அதை வெயிலில் வைக்கவும் அரிசி வைத்திருக்கும் பாத்திரத்தை மூடக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் அடுத்தது அரிசி பாத்திரத்தில் 8 முதல் 9 கிராம்களை வைத்து இருண்ட இடத்தில் வைக்கவும் கிராம்புகளில் உள்ள வாசனையானது பூச்சிகளை விரட்டி அடிக்கிறது தோல் உரித்த பூண்டை அரிசி பாத்திரத்தில் வைக்கவும் பூண்டின் வலுவான வாசனையானது புழுக்கள் மற்றும் பூச்சிகளை விரட்டுகிறது தீப்பெட்டியை கூட அரிசி பாத்திரத்தில் வைக்கலாம். தீப்பெட்டியில் சல்ஃபர் உள்ளது இது பூச்சிகளை விரட்ட உதவுகிறது முக்கியமாக தீப்பெட்டி வைத்திருந்த அரிசி பாத்திரத்தில் இருந்து சமைக்க அரிசியில் எடுக்கும் போது முதலில் அதை வெந்நீரில் கழுவ வேண்டும் அப்போதுதான் அது சுத்தமாக இருக்கும்..

அரிசியில் உள்ள புழு மற்றும் பூச்சிகளை விரட்டும் எளிய தந்திரங்களை அறிந்து கொண்டீர்கள் அல்லவா பிறகு இன்னும் ஏன் தாமதமாக வேண்டும் இந்த தந்திரங்களை பின்பற்றி அம்மா பாட்டியின் உதவி என்று அருகில் உள்ள பூச்சிகளை விரட்டுங்கள் மேலும் நமது சிரமத்தை எளிதாக குறைக்க முடிகிறது..!!

Read Entire Article