ARTICLE AD BOX
சென்னை: நடிகர் அரவிந்த் சாமி மகளுக்கு திடீரென திருமணம் நடந்துள்ளது. கடந்த 1994ம் ஆண்டு காயத்ரி ராமமூர்த்தி என்பவரை அரவிந்த் சாமி திருமணம் செய்தார். 16 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பின் இருவரும் 2010ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின் 2012ம் ஆண்டு அபர்ணா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அரவிந்த் சாமி, காயத்ரிக்கு, ஆதிரா என்ற 28 வயதில் மகளும், ருத்ரா என்று 24 வயதில் மகனும் உள்ளனர். இதில் மகள் ஆதிரா, சமையல் கலைஞராக இருக்கிறார். அமெரிக்காவில் பணிபுரிந்து வந்த இவர், அந்நாட்டை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்களின் திருமணம் சமீபத்தில் சென்னையில் எளிமையான முறையில் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.