அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் “கட்”- தமிழக அரசு அதிரடி…!

3 hours ago
ARTICLE AD BOX

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் இன்று (மார்ச் 19) போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்தநிலையில், பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், அங்கீகரிக்கப்படாத சங்கங்கள், சில கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(மார்ச் 19) ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்ய முன் வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் அல்லது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது, அரசு அலுவலகங்களின் இயல்பான செயல்பாட்டைப் பாதிக்கும். அவ்வாறு அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு சம்பளம் கிடையாது. மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பகுதிநேர ஊழியர்கள், தினசரி ஒப்பந்த ஊதியம் பெறுபவர்கள், பணியிலிருந்து நீக்கப்படுவார்கள். காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராதவர்களின் விவரங்களை சேகரிக்க அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் “கட்”- தமிழக அரசு அதிரடி…! appeared first on Rockfort Times.

Read Entire Article