அம்மியில் அரைத்து வைக்கும் குழம்பு, மிக்ஸியில் வைப்பதை விட சுவையாக இருப்பது ஏன் தெரியுமா?

19 hours ago
ARTICLE AD BOX

அம்மியில் அரைத்து வைக்கும் குழம்பு, மிக்ஸியில் வைப்பதை விட சுவையாக இருப்பது ஏன் தெரியுமா?

Health
oi-Vishnupriya R
Subscribe to Oneindia Tamil

சென்னை: அந்த காலங்களில் அம்மியிலேயே சட்னி, இட்லி, தோசை மாவு, வடை மாவு உள்ளிட்டவைகளை அரைத்துவிடுவார்கள். ஆனால் தற்போதெல்லாம் மிக்ஸி, கிரைண்டரை கொண்டு இதை செய்கிறார்கள். அம்மியில் அரைத்து வைக்கும் குழம்பு சுவையாக இருப்பது ஏன் தெரியுமா?

அம்மியில் சிலர் வேகமாக அரைத்து விடுவார்கள். இதனால் சுவை மட்டும் கூடியதுடன், உடல் ஆரோக்கியமும் வலுவடைந்தது. பெண்கள் அம்மியில் அரைக்கும் போது அவர்களது முக்கிய உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் போய் அவை சிறப்பாக இயங்க வைக்கிறது.

health sambar ammikkal

ஆனால் மிக்ஸி, கிரைண்டரில் சுவையும் இருக்காது, உடல்நலமும் பாதிக்கப்படுகிறது. எனவேதான் நம் தாத்தா, பாட்டி எல்லாம் வீடு கட்டும் போதே அம்மி, ஆட்டுக்கல்லை தேவையான இடத்தில் வைத்து சிமென்ட் போட்டு பூசி விட்டனர். சிலர் உட்கார்ந்து கொண்டு அரைக்க வசதியாகவும் இந்த முறை கையாளப்பட்டது.

இதுகுறித்து சீத்தாலட்சுமி என்பவர் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: அம்மியில் அரைத்து செய்த குழம்பு மிக்சியில் அரைப்பதைவிட சுவையாக இருப்பதற்குக் காரணங்கள் என்ன?

மசாலா பொருட்களை அம்மியில் அரைப்பதற்கும், மிக்சியில் அரைப்பதற்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது.

மிக்சியில் விழுதாகவும், சொரசொரப்பாகவும் தான் அரைக்க முடியும். அம்மியில் அப்படியல்ல. நாம் விரும்பும் பதத்தில் எப்படி வேண்டுமானாலும் அரைக்கலாம்.

சிலவகை குழம்புகளுக்கு இஞ்சி, பூண்டை லேசாக நசுக்கி போட்டால் தான் சுவையாக இருக்கும். அப்படி செய்யும்போது இஞ்சி, பூண்டில் உள்ள சாறு முழுவதும் குழம்பில் கலந்துவிடும்.

ஒவ்வொரு பொருளையும் குழம்பின் தன்மைக்கு ஏற்ப அம்மியில் அரைத்து உபயோகப்படுத்தலாம். மிக்சியில் அப்படியெல்லாம் எதிர்பார்க்க முடியாது.

முன்னோர்களின் சமையலின் மகத்துவம் அம்மியிலும், கைப்பக்குவத்திலும்தான் அடங்கி இருந்தது.

மசாலா பொருட்களை அம்மியில் அரைப்பதற்கும் மிக்ஸியில் அரைப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை கீழே குறிப்பிட்டிருக்கிறேன்.

அம்மியில் வைத்து அரைக்கப்படும் பொருள்கள் நசுக்கப்பட்டு அரைக்கப்படுகிறது.
மிக்ஸியில் பொருட்கள் வெட்டப்பட்டு அரைக்கப்படுகிறது.

அம்மியில் அரைக்கும் பொழுது அரைக்கப்படும் மசாலா பொருட்களுக்கு சூடு ஏறுவதில்லை. மாறாக கல்லின் குளிர்ச்சித்தன்மை மசாலா பொருட்களின் வாசனையை குறைக்காமல் இருக்கிறது.
மிக்ஸியில் அரைக்கும் பொழுது மோட்டாரால் ஏற்படும் வெப்பம் பாத்திரத்திற்கு உள்ளே இருக்கும் மசாலா பொருட்களையும் பாதிக்கிறது. வாசனையும் சுவையும் அரைக்கும் பொழுதே மாறுபடுகிறது.

அம்மியில் அரைக்கும் பொழுது ஒரே சீராக மசாலா பொருட்கள் அரைக்கப்படுகிறது.
மிக்ஸியில் அரைக்கும் பொழுது பாத்திரத்தின் அடியில் இருக்கும் மசாலா பொருட்கள் மட்டுமே நன்றாக அரைபடுகிறது. மூடியில் ஒட்டியிருக்கும் பொருட்கள் சரியாக அரைபடுவதில்லை.

அம்மியில் அரைக்கும் பொழுது அவ்வப்பொழுது தேவையான அளவு தண்ணீர் தெளித்து அரைக்கலாம்.
மிக்ஸியில் அரைக்கும் பொழுது அவ்வாறு செய்ய முடிவதில்லை.

மேலும் அம்மியில் அரைக்கும் பொழுது மில்லிகிராம் அளவிற்காவது அந்த கல்லும் மசாலா பொருட்களுடன் சேர்ந்து வரும்.

அதில் உடலுக்குத் தேவையான சில சத்துக்கள் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.

ஏனென்றால் வட இந்தியாவில் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாம்பல் நிறத்தில் இருக்கும் மண் உருண்டைகளை சித்த மருத்துவ கடைகளிலிருந்து வாங்கி சாப்பிடுகிறார்கள்.

அதிலிருந்து சுண்ணாம்புச்சத்து கர்ப்பிணிகளுக்கு கிடைக்கப் பெறுகிறதாம்.

இப்போதெல்லாம் நாகரிக யுகத்திற்கு ஏற்ப அம்மியும் புதுவடிவம் பெற்றுள்ளது. கையாள்வதற்கு எளிதாக இருக்கும் விதத்தில் சிறிய வடிவங்களிலும் கிடைக்கின்றன. அவற்றின் மகத்துவத்தை புரிந்து கொண்டு நிறைய பேர் அவைகளை பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள்.

ஆன்லைன் வர்த்தகத்திலும் அம்மிக் கற்கள் கிடைக்கின்றன. ரூபாய் 1000 இருந்து 2000 வரை உள்ளது. உடலில் சக்தி உள்ளவர்கள், வீட்டில் பயன்படுத்துவதற்கு ஏதுவான இடம் இருந்தால் வாங்கி பயன்படுத்தி உணவில் சுவை கூட்டுங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
English summary
Do you know why the masala grinded in Ammi kal gives best taste to Sambar than mixie?
Read Entire Article