அம்மாபட்டினம் அருகே ராட்சத கதண்டு கூடு தீ வைத்து அழிப்பு

19 hours ago
ARTICLE AD BOX

அறந்தாங்கி: அம்மாபட்டினம் அருகே மரத்தில் ராட்சத கதண்டு கூடு தீ வைத்து அழிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் அருகே ஒட்டாங்கரை கிராமத்தில் கதண்டு கூடு உள்ள பகுதி காமாட்சி அம்மன் கோவிலுக்கு அருகே பனைமரத்தில் கடந்த சில மாதங்களாக அவ்வழியாக வரும் பக்தர்களையும் ஒட்டாங்கரை கிராம பொதுமக்களையும், கண்மாய்களுக்கு குளிக்க வருபவர்களையும், வயலுக்கு செல்லக்கூடியவர்களையும் மரத்தில் இருந்த கதண்டு அச்சறுத்தி வந்துள்ளது.

இதையடுத்து அம்மாபட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஜெகதாப்பட்டினம் தீயணைப்பு நிலையத்தில் இந்த கதண்டு கூடுகளை அப்புறபடுத்த வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர். இதையடுத்து ஜெகதாப்பட்டினம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்க்கு சென்று கதண்டு கூட்டை அப்புறபடுத்தினர். அச்சமாக சென்று வந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

The post அம்மாபட்டினம் அருகே ராட்சத கதண்டு கூடு தீ வைத்து அழிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article