ARTICLE AD BOX
தினமும் நீ அனுபவிக்கும் ஒரு ஆனந்தத்தை பற்றி கூறு என்றால்
தினசரி உணவுமேசையில் சோற்றுப்பானை திறந்து என் மகன்களுக்கு சுடச்சுட உணவு பரிமாறும் சமயம் மனம் அடையும் ஒரு பெரும் திருப்தி தான் அந்த ஆனந்தம் என்பேன்.
இதுவே ஒரு ஐந்தாண்டுகளுக்கு முன்னர் கேட்டிருந்தால் என் பதில் வேறு மாதிரியாக இருந்திருக்கும். இன்று எங்க அம்மா இல்லை, அம்மாவின் இடத்தில் இருந்து என் மகன்களை வளர்க்கும் பொறுப்பினை எடுத்துக்கொண்ட பிறகு வாழ்க்கை வேறு மாதிரி தான் இருக்கிறது.
பீர்க்கங்காயை சாதாரணமா நினைச்சிடாதீங்க..!! இதுல எக்கச்சக்க நன்மைகள் இருக்கு..!!
பொறுப்புகள் சுமையாய் அன்றி சுகமாய் அமையப்பெறுவதும் ஒருவகையில் பெரிய ஆசுவாசம் தானே!
அம்மாக்கள் ஏன் எப்போதும் அடுப்படிக்குள்ளயே தங்களை புகுத்திக்கொள்கின்றனர் என ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அவங்களுக்கு அது தான் சொர்க்கம் போல இருந்திருக்கிறது. சமைக்கணும் ,நமக்கு பரிமாறணும், நாம சாப்பிடுறதை ரசிக்கணும், பிறகு அடுப்படியை அடுக்கணும், துடைக்கணும், கழுகணும் இப்படியே அவங்க பொழுதுகள் கழித்தது எல்லாம் வேண்டி விரும்பித்தான், யாரும் கட்டாயப்படுத்தி பெண்களை எதிலும் புகுத்திவிட முடியாது. அம்மா ஆகிட்டா மட்டும் அந்த பொறுப்பு வந்திடாது ,அந்த பொறுப்பினை சுமக்கும் அம்மாவாக மாறவும் கொஞ்ச காலம் தேவைப்படும்.
பெண்கள் எத்தனை பெரிய உயரத்தை அடைந்திருந்தாலும் End of the day, அவங்க ஒரு குடும்பத்தின் தலைவி குடும்பம்,பிள்ளைகள் அவர்களது ஆரோக்கியம், படிப்பு, எதிர்காலம் இவை அனைத்தையும் முன்னின்று பூர்த்தி செய்ய வேண்டிய அக்கறை கொண்டவர்கள்.