அம்மா வயது பெண் செய்யக்கூடாத காரியம்.. 14 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்.. ஆடிப்போன கேரளா

3 hours ago
ARTICLE AD BOX

அம்மா வயது பெண் செய்யக்கூடாத காரியம்.. 14 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்.. ஆடிப்போன கேரளா

Thiruvananthapuram
oi-Mani Singh S
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு அருகே 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 35 வயது பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தனது மகனின் நண்பனான அந்த 14 வயது சிறுவன் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வதை பயன்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சம்பவத்தன்று பள்ளிக்கூடம் சென்ற சிறுவனை பாதி வழியில் மறித்து எர்ணாகுளத்திற்கு கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவர்கள், சிறுமிகள், குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை, வன்கொடுமை செய்யும் கொடூர சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இதனை தடுக்கவே போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. எனினும் பள்ளிகளில், பொது வெளியில் செல்லும் குழந்தைகள், சிறுவர்கள் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் கொடூர சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

Kerala POCSO Crime

மகனின் நண்பன்

பெண் பிள்ளைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் காம கொடூரர்களுக்கு மத்தியில், கேரளாவில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 35 வயது பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தனது மகனின் நண்பன் என்பதால் அடிக்கடி வீட்டுக்கு வந்த சிறுவனிடம் தகாத செயலில் ஈடுபட்டுள்ளார் இந்த கொடூர பெண்.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் 35 வயது பெண் ஒருவர் கணவர், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 11 வயதில் ஒரு மகன் இருக்கின்றான். அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறான். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் 14 வயது சிறுவனும் அதே பள்ளியில் படித்து வருகிறான். சிறுவர்கள் இருவரும் பள்ளிக்கு செல்லும் போதும், வரும்போதும் ஒன்றாக தான் வருவார்கள். நண்பர்களாக இருவரும் பழகி வந்தனர்.

சிறுவன், பக்கத்துவீட்டு பெண் மாயம்

மேலும் பக்கத்து வீடு என்பதால் இருவீட்டினரும் பேசிக்கொள்வார்கள். அதேபோன்று சிறுவர்களும் இருவர் வீட்டிலும் மாறி மாறி விளையாடுவது வழக்கம். அப்படித்தான் பக்கத்துவீட்டு 16 வயது சிறுவன், 35 வயது பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி விளையாடுவதற்கு வருவான். அப்போது அந்த சிறுவன் மீது மோகம் கொண்ட அந்த பெண் பாலியல் இச்சையில் ஈடுபட்டுள்ளார். அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுவன் தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு வீட்டில் இருந்து சென்றிருக்கிறான். ஆனால் பள்ளிக்கு சிறுவன் வரவில்லை என்று பெற்றோருக்கு போன் போயுள்ளது. இதனால் அந்த சிறுவனின் பெற்றோர் பள்ளி மற்றும் அப்பகுதி முழுவதும் தேடினர். எங்கு தேடியும் சிறுவனை காணவில்லை. இதனால் பக்கத்து வீட்டில் சென்றும் தேடினர். ஆனால் அங்கும் சிறுவன் இல்லை. மேலும் அந்த பெண்ணையும் காணவில்லை. அவரை தொடர்புகொள்ள முயன்றபோது முடியவில்லை.

திருச்சி அரசு மருத்துவமனையில்.. நர்சிங் மாணவியிடம் வரம்பு மீறிய போலீஸ்காரர்.. போக்சோவில் கைது!
திருச்சி அரசு மருத்துவமனையில்.. நர்சிங் மாணவியிடம் வரம்பு மீறிய போலீஸ்காரர்.. போக்சோவில் கைது!

போக்சோவில் கைதான பெண்

இதையடுத்து சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர். விசாரணையில், பக்கத்து வீட்டு பெண் தான் அந்த சிறுவனை எர்ணாகுளத்திற்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சிறுவனை மீட்டனர். மேலும் சிறுவனை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக 35 வயது பெண்ணை பாலக்காடுக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

இதில் அந்த பெண் தன் வீட்டுக்கு வரும் போது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், சம்பவத்தன்று எர்ணாகுளத்திற்கு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ வழக்கில் பெண்ணை கைது செய்தனர். தாய் வயதில் இருக்கும் பெண் ஒருவரே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
English summary
A 35-year-old woman has been arrested under the POCSO Act for sexually assaulting a 14-year-old boy near Palakkad in Kerala. The 14-year-old boy, who was her son's friend, took advantage of his frequent visits to her home to sexually assault her. She has been arrested for intercepting the boy halfway to school on the day of the incident, abducting him and taking him to Ernakulam where he was sexually assaulted.
Read Entire Article