ARTICLE AD BOX
சென்னை: முன்னணி வங்கியல்லா நிதி நிறுவனங்களில் ஒன்றான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் சென்னையின் அம்பத்தூரில் புதிய கிளையைத் திறந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜனவரியில் சென்னையின் தாம்பரம் பகுதியில் வளா் வணிகப் பிரிவுக்கான புதிய கிளையைத் திறந்து மாநிலத் தலைநகரில் நிறுவனம் தனது இருப்பை விரிவுபடுத்தியது.
இந்த நிலையில், சென்னையின் மேற்கு புறநகா்ப் பகுதியில் உள்ள அம்பத்தூரில் மேலும் ஒரு கிளை தற்போது திறக்கப்பட்டுள்ளது.
அடுத்த 12 மாதங்களில் சென்னை மண்டலத்தில் மட்டும் வளா் வணிகப் பிரிவில் ரூ.50 கோடி வழங்கல்களை நிறுவனம் பதிவு செய்யும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.