அமெரிக்காவை தொடர்ந்து.. இந்தியர்களை விரட்ட தயாராகும் கனடா! புதிய விதிமுறையால் சர்ச்சை!

3 hours ago
ARTICLE AD BOX

அமெரிக்காவை தொடர்ந்து.. இந்தியர்களை விரட்ட தயாராகும் கனடா! புதிய விதிமுறையால் சர்ச்சை!

International
oi-Halley Karthik
Subscribe to Oneindia Tamil

ஒட்டாவா: கனடாவின் புதிய விதிமுறை காரணமாக அங்குள்ள இந்தியர்கள் நெருக்கடியை சந்திக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக மாணவர்கள் விசா பிரச்சனையை எதிர்கொண்டிருக்கின்றனர்.

குடியேற்றம் மற்றும் அகதிகள் பாதுகாப்பு விதிமுறைகளில் (Immigration and Refugee Protection Regulations) அந்நாட்டு அரசு சமீபத்தில் திருத்தம் மேற்கொண்டிருக்கிறது. இந்த திருத்தம்தான் இந்தியர்களுக்கு பாதிப்பை ஏற்பத்தும் என்று சொல்லப்படுகிறது.

Canada international

கனடாவில் ஏறத்தாழ 13 லட்சத்திற்கும் அதிகமாக இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். இது அந்நாட்டு மொத்த மக்கள் தொகையில் 3.7% ஆகும். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் என பல்வேறு காரணங்களுக்காக கனடாவில் இந்தியர்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், வெளிநாட்டினர்களை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு புதிய விதிமுறையை கொண்டுவந்திருக்கிறது.

இதன்படி Border Officials எனப்படும் கனடாவின் எல்லை அதிகாரிகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த அதிகாரிகள் நினைத்தால் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர்களின் விசாவை எப்போது வேண்டுமானாலும் மாற்றவும் ரத்து செய்ய முடியும். அதாவது இந்தியர்கள் வேலைக்கான Work Visa-வில் கனடாவுக்கு சென்றிருக்கிறீர்கள் எனில், உங்கள் விசா சுற்றுலா விசாவா (Visitor Visa) மாற்றப்படும். அப்படி நடந்தால் நீண்ட நாட்களுக்கு கனடாவில தங்கி வேலை செய்ய முடியாது.

விதிகளை மீறியுள்ளதாக அதிகாரிகள் கருதினால், தவறான தகவல்கள் கொடுத்திருந்தால், பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்கள் இருப்பதாக அதிகாரிகள் கருதினால் விசாவை அவர்களால் மாற்றவும், ரத்து செய்யவும் முடியும். இப்படி நடந்தால் இந்தியர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்படுவார்கள்.

இதற்கு முன்னர் 'குடியேற்றம், அகதி மற்றும் குடியுரிமை துறையிடம்' (IRCC) இந்த அதிகாரம் இருந்தது. இது கனடாவுக்குள் வரும் ஒவ்வொருக்கும் தேவையான விசாவை வழங்கியது. எளிதில் யாருக்கும் விசா மறுக்கப்படாது. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு குடியேறுவது இயல்பானதுதான் என்பதையும், கனடா மக்களுக்கு தேவையான வேலைகளை குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டினரால் செய்து கொடுக்க முடியும் என்பதையும் இந்த துறை உணர்ந்து இருந்தது.

எனவே விசா தாராளமாக கிடைத்தது. ஒருவேளை விசா மறுக்கப்பட்டால் அந்நாட்டின் நீதிமன்றத்தில் உடனடியாக வழக்கு தொடர முடியும். ஆனால், தற்போது இந்த அதிகாரம் எல்லை அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டிருப்பதால், அவர்கள் கனடாவுக்குள் நுழையும் அனைவரையும் வந்தேறிகள் என்கிற பார்வையில்தான் பார்ப்பார்கள். எனவே விசா வழங்குவது குறையும். மட்டுமல்லாது இவர்கள் மூலம் விசா மறுக்கப்பட்டால் உடனடியாக நீதிமன்றத்தை அணுகி மேல் முறையீடு செய்ய முடியாது.

மட்டுமல்லாது கனடாவுக்குள் தங்கியிருக்கும் இந்தியர்களின் விசாக்களையும் இவர்களால் மாற்றவும், ரத்து செய்யவும் முடியும். லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து இந்திய மாணவர் ஒருவர் அங்கு படிக்கிறார் எனில், அவருடைய மாணவர் விசாவை அதிகாரிகள் ரத்து செய்வதன் மூலம், கல்வியை நிறுத்த முடியும். மட்டுமல்லாது விசா ரத்து செய்யப்பட்டவர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்கள்.

More From
Prev
Next
English summary
Canada's new regulations have created a situation where Indians living there are facing difficulties. In particular, students are encountering visa-related issues. The Canadian government has recently made amendments to the Immigration and Refugee Protection Regulations. These amendments are said to be the reason for the challenges faced by Indians.
Read Entire Article