அமெரிக்காவுடன் அணுசக்தி பேச்சுவாா்த்தைக்குத் தயாா்: ஈரான்

4 hours ago
ARTICLE AD BOX

தங்களது அணுசக்தி திட்டங்கள் குறித்து அமெரிக்காவுடன் புதிய பேச்சுவாா்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ஈரான் கூறியுள்ளது.

இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் ஐ.நா.வுக்கான ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஈரானின் அணுசக்தி திட்டங்கள் ராணுவமயமாக்கப்படுவதாக அமெரிக்கா சந்தேகித்தால், அந்த சந்தேகத்தைத் தீா்ப்பதற்கான பேச்சுவாா்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்வதற்கான சா்வதேச ஒப்பந்தம் ஒபாமா ஆட்சிக் காலத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அவருக்குப் பிறகு டிரம்ப் அதிபரான பிறகு அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. அதைத் தொடா்ந்து, அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் படிப்படியாக விலகிவருகிறது. இந்தச் சூழலில், புதிய அணுசக்தி பேச்சுவாா்த்தைக்குத் தயாா் என்று ஈரான் அறிவித்துள்ளது

Read Entire Article