அமெரிக்காவில் பிறப்பால் குடியுரிமை இல்லை? டிரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் அதிரடி தடை!

4 hours ago
ARTICLE AD BOX
Donald trump

சியாட் : அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை தினமும் வெளியிட்டு வருகிறார். அதில் பிரதானமானது சட்டவிரோதமாக குடியுரிமை பெறுவதை தடுப்பது மற்றும் ஏற்கனவே சட்ட விரோதமாக குடியேறியவர்களை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றுவதாகும்.

அதில் முக்கிய நகர்வாக, அமெரிக்காவில் பிறப்பால் ஒரு குழந்தை அமெரிக்vvக குடிமகனாக மாறும் நடைமுறையை டிரம்ப் மாற்ற கையெழுத்திட்டுளளார். அதாவது, அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் தாய் அல்லது தந்தை இருவரும் அமெரிக்க குடிமகன்களாகவோ அல்லது அமெரிக்காவில் சட்டபூர்வமாக குடியேறியவர்களாகவோ இருக்க வேண்டும். அப்படி யாரேனும் ஒருவர் சட்டத்திற்கு எதிராக அமெரிக்காவில் குடிபுகுந்து இருந்தால் அந்த தம்பதிக்கு பிறக்கும் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படாது என்பதே டொனால்ட் டிரம்ப்பின் புதிய உத்தரவு ஆகும்.

பிறப்பால் குடியுரிமை என்ற அமெரிக்க சட்டதிருத்தத்தில் மாற்றம் கொண்டு வரும் டிரம்பின் இந்த உத்தரவானது வரும் பிப்ரவரி 19ஆம் தேதிக்கு பிறகு அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, கர்ப்பிணிகள் பலர் தங்களுக்கு பிரசவ தேதி பிப்ரவரி 19க்கு [பிறகு இருந்தாலும், பிப்ரவரி 19க்கு முன்னரே தங்கள் குழந்தைகளை அறுவை சிகிச்சை வாயிலாக பெற்றெடுக்க மருத்துவமனைகளை அணுகி வருகின்றனர் என தகவல்கள் வெளியாகி வருகிறது.

டிரம்பின் இந்த முடிவு அமெரிக்க குடியுரிமை சட்டத்திற்கு எதிரானது என வாஷிங்டன், அரிசோனா, இல்லினாய்ஸ் மற்றும் ஓரிகான் ஆகிய ஜனநாயக கட்சி மாகாணங்கள் சியாட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் கோஹெனூர் இந்த உத்தரவில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக அதிருப்தி தெரிவித்தார்.

” இந்த உத்தரவு அரசியலமைப்பிற்கு உட்பட்டது என்று ஆளும் அரசு உறுப்பினர் எவ்வாறு சந்தேகத்திற்கு இடமின்றி கூற முடியும் என்பதைப் புரிந்துகொள்வதில் எனக்கு சிக்கல் உள்ளது. நான் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக நீதிபதியாக இருக்கிறேன். இது போன்ற ஒரு வழக்கை நான் பார்த்ததாக எனக்கு நினைவில்லை. இது அப்பட்டமான அரசியலமைப்புக்கு எதிரான உத்தரவு” என்று நீதிபதி கோஹெனோர் கூறினார்.

டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு விளக்கம் கேட்டு வழக்கை 14 நாட்களுக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வரும் பிப்ரவரி 6 இந்த வழக்கு விசாரணைக்கு வரும் வரையில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்த இடைக்கால தடையும் நீதிபதி ஜான் கோஹெனோர் உத்தரவிட்டுள்ளார். டிரம்ப் பிறப்பித்த உத்தரவு பிப்ரவரி 19ஆம் தேதி தான் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article