அமெரிக்காவில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக அறிவிப்பு

20 hours ago
ARTICLE AD BOX

வாஷிங்டன்,

ஆங்கில மொழியை முதல் மொழியாகப் பேசுவோரில் 3-ல் 2 பங்கினர் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அமெரிக்காவில் பரவலாகப் பேசப்படும் ஆங்கில மொழி அமெரிக்க ஆங்கிலம் என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இங்கிலாந்திலும் அமெரிக்க குடியேற்றப் பகுதிகளிலும் பேசப்பட்டது ஒரே மாதிரியான ஆங்கிலம் தான். காலபோக்கில் ஆங்கில ஒலிப்பு முறை மற்றும் எழுத்தில் மாற்றம் ஏற்பட்டது.

இந்தநிலையில், அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக ஆங்கிலத்தை மாற்றும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

பெடரல் அரசு நிர்வாகம் மற்றும் அரசிடம் நிதி பெறும் அமைப்புகள், பிற மொழி பேசுபவர்களுக்கு உரிய மொழிபெயர்ப்பு உதவிகளை வழங்க வேண்டும் என 90களில் அதிபர் கிளிண்டன் பிறப்பித்த உத்தரவு இதன்மூலம் நீக்கப்படுகிறது. இனி, மொழிபெயர்ப்பு உதவி வழங்குவது அந்தந்த அமைப்புகள் முடிவுக்கு உட்பட்டது. அமெரிக்காவில் 350க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன ஆனாலும் வெள்ளை மாளிகை ஆவணங்களில் எப்போதும் ஆங்கிலம் மட்டுமே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Read Entire Article