அமெரிக்காவின் டீலிங்கை குப்பையில் வீசிய UAE.. துருக்கியுடன் கைகோர்ப்பு! இந்தியா உஷாராகுமா?

3 days ago
ARTICLE AD BOX

அமெரிக்காவின் டீலிங்கை குப்பையில் வீசிய UAE.. துருக்கியுடன் கைகோர்ப்பு! இந்தியா உஷாராகுமா?

International
oi-Halley Karthik
Subscribe to Oneindia Tamil

அபுதாபி: அமெரிக்காவின் F-35 ரக போர் விமானத்தை வாங்கும் யோசனையை கைவிட்டுவிட்டு, துருக்கியின் விமானத்தை வாங்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவெடுத்துள்ளது. இந்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், உலக நாடுகள் ஒதுக்கி தள்ளும் விமானத்தை டிரம்ப் இந்தியாவில் தலையில் கட்ட பார்ப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தங்களது விமானம்தான் மிகவும் சக்தி வாய்ந்தது என்று அமெரிக்கா கூறி வரும் நிலையில், அதன் நட்பு நாடான அமீரகமே F-35ஐ வாங்க ஆர்வம் காட்டாதது விவாதங்களை கிளப்பியுள்ளது.

Middle East Saudi Arabia

துருக்கி தற்போது 5ம் தலைமுறை போர் விமானத்தை உருவாக்கி வருகிறது. இந்த திட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக, துருக்கி ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின்(TAI) தலைவர் 'மெஹ்மத் டெமிரொக்லு' கூறியுள்ளார். அபுதாபியில் 'IDEX 2025' எனும் பெயரில் தற்போது பாதுகாப்புதுறை கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றிருந்த மெஹ்மத், மேற்கூறிய விஷயத்தை தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், அமெரிக்காவின் போர் விமானத்தை தவிர்க்கும் இரண்டாவது அரபு நாடாக அமீரகம் மாறியிருக்கிறது. ஏற்கெனவே, சவுதி தலையில் அமெரிக்கா F-35ஐ வைத்து மிளகாய் அரைக்க பார்த்திருக்கிறது. ஆனால், உஷாரான சவுதி சைலன்ட்டாக நழுவிக்கொண்டது. அதே பாணியில் அமீரகமும் இப்போது கழன்றுக்கொண்டிருக்கிறது.

அமெரிக்காவின் விமானங்களை அமீரகம் வாங்க மறுப்பது இது இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே F-22 குறித்த பேச்சுகள் எழுந்தபோது, பிரான்ஸ் பக்கம் கைகாட்டி ரஃபேல் விமானங்களை வாங்கி தப்பித்துவிட்டது. இப்போது, துருக்கியின் KAAN விமானங்களை வாங்கப்போவதாக அறிவித்திருக்கிறது.

உலக அளவல் 3 நாடுகளிடம்தான் 5ம் தலைமுறை விமானங்கள் இருக்கின்றன.

1. அமெரிக்கா - F-22 Raptor, F-35 Lightning II
2. ரஷ்யா - Su-57 Felon
3. சீனா - J-20 Mighty Dragon

தவிர வேறு சில நாடுகள் 5ம் தலைமுறை விமானங்களை உருவாக்கி வருவாக கூறியுள்ளன. அதாவது,

4. இந்தியா - HAL AMCA (புரோட்டோடைப் 2026ல் எதிர்பார்க்கப்படுகிறது, 2030ல் முதல் விமானம் பறக்கும்)
5. துருக்கி - KAAN (புரோட்டோடைப் வெளியாகி, முதல் விமானம் கடந்த ஆண்டு பறந்தது)
6. தென்கொரியா& இந்தோனேசியா- (4.5ம் தலைமுறை விமானங்களை உருவாக்கி வருகின்றன)
7. ஜப்பான் - Mitsubishi F-X (2035ல் பறக்கும் என சொல்லப்படுகிறது)
9. ஈரான் - 5ம் தலைமுறை விமானங்களை உருவாக்குவதாக சொல்கிறது. பொதுவெளியில் ஆதாரங்கள் இல்லை.

மற்ற எல்லா நாடுகளும், இந்த நாடுகளிடம்தான் 5ம் தலைமுறை விமானத்தை வாங்க முடியும். எனவேதான் அமீரகம் துருக்கியை நாடியிருக்கிறது. துருக்கியிடம் டெக்னாலஜி கொஞ்சம் கம்மிதான். அதே நேரம், அமீரகத்தை விட பணக்கார நாடு கிடையாது. எனவே, துருக்கிக்கு விமானத்தை உருவாக்கும் திட்டத்தில் உதவி செய்து, குறைந்த விலையில் அதிக விமானங்களை கொள்முதல் செய்ய அமீரம் யோசித்து வருகிறது.

மட்டுமல்லாது எல்லா வகையிலும் F-35ஐ விட KAAN அதிக திறன் வாய்ந்ததாக இருக்கிறது. ஒப்பீடுகளை கொண்டு பார்க்கையில், KAAN விமானத்தில் 2 என்ஜின்கள் இருக்கும். ஆனால் F-35ல் ஒன்றுதான்.

வேகத்தை பொறுத்தவரை KAAN ஒலியை விட 1.8-2.0 மடங்கு அதி வேகத்தில் பறக்கும். F-35 வேகம் 1.6தான். தவிர விலையும் ஓரளவுக்கு நியமானதாகத்தான் இருக்கிறது. எனவே இதையெல்லாம் பார்த்துதான் KAAN தயாரிப்பு திட்டத்தில் அமீரகம் இணைந்திருக்கிறது.

இப்போது கேள்வி என்னவெனில், அமெரிக்காவின் தோஸ்து நாடுகளே F-35ஐ வாங்காமல் நழுவிக்கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தியா இதை வாங்குவதற்கு ஒப்புக்கொண்டிருப்பது ஏன்? என்பதுதான். இந்த டீலிங் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே!

More From
Prev
Next
English summary
The United Arab Emirates (UAE) has decided to drop its plan to purchase the American F-35 fighter jet and instead opt for Turkey's fighter jet. Following this development, criticism has arisen, questioning why India is considering purchasing the F-35, a jet that other countries are rejecting.
Read Entire Article