அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகளை சங்கிலியால் பிணைத்து நாடு கடத்தும் காட்சி வெளியீடு

4 days ago
ARTICLE AD BOX

அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகளை சங்கிலியால் பிணைத்து நாடு கடத்தும் காட்சி வெளியீடு

காணொளிக் குறிப்பு, சங்கிலி போட்டு சட்டவிரோத குடியேறிகளை நாட்டை விட்டு வெளியேற்றும் காணொளியை வெளியிட்ட அமெரிக்கா
அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகளை சங்கிலியால் பிணைத்து நாடு கடத்தும் காட்சி வெளியீடு
5 நிமிடங்களுக்கு முன்னர்

கையிலும் காலிலும் சங்கிலி போட்டு சட்டவிரோத குடியேறிகளை நாட்டை விட்டு வெளியேற்றும் காட்சியை அமெரிக்காவின் அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு அந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்களை அமெரிக்க ராணுவ விமானத்தில் வெளியேற்றி வருகிறார். கை கால்களில் சங்கிலியிட்டு அனுப்புவதை பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட நாடுகள் கண்டித்திருந்தன.

இந்தியாவுக்கு இதுவரை 3 விமானங்களில் அமெரிக்கா சட்டவிரோத குறியேறிகளை அனுப்பியுள்ளது. கை கால்காலில் விலங்கு போடப்பட்டிருந்ததாகவும், கழிவறைக்குச் செல்லக் கூட அனுமதிக்கவில்லை என இந்தியா வந்த நபர்கள் கூறியதாக சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து நரேந்திர மோதி அரசுக்கு அழுத்தங்கள் எழுந்தன.

இந்தச் சூழலில் சட்டவிரோத குடியேறிகளை நாட்டை விட்டு வெளியேற்றும் காட்சிகளை அமெரிக்கா தற்போது வெளியிட்டுள்ளது. இதில் விலங்கு போடப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

Read Entire Article