அமெரிக்கா, கனடா.. இந்தியர்களுக்கு எதிராக திடீரென திரும்பிய உலக நாடுகள்.. ஒன்று கூடிட்டாங்களே

1 day ago
ARTICLE AD BOX

அமெரிக்கா, கனடா.. இந்தியர்களுக்கு எதிராக திடீரென திரும்பிய உலக நாடுகள்.. ஒன்று கூடிட்டாங்களே

New York
oi-Shyamsundar I
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: உலகில் இந்தியர்கள் அதிகம் பயணிக்கும் நாடுகள் அடுத்தடுத்து தங்கள் விசா விதிமுறைகளை மாற்ற தொடங்கி உள்ளன. விசாவில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க முக்கியமான நாடுகள் முடிவு எடுத்துள்ளன. கனடா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் விசா விதிகளை, குடியிருப்பு விதிகளை மாற்ற தொடங்கி உள்ளன. இதனால் இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது, பணி நிமித்தமாக இடம் மாறுவது, ஏன் சுற்றுலா செல்வதே சிக்கலாக மாறி உள்ளது.

Donald Trump

அமெரிக்கா விசா நிராகரிப்பு முடிவு

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் அதிபரான நிலையில் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்சிப் முறையில் மாற்றத்தை கொண்டு வர அவர் முடிவு செய்துள்ளார். இது கோர்ட்டால் தடுக்கப்பட்டு உள்ளது என்றாலும் விரைவில் அமலுக்கு வரும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்ஷிப் மூலம் பலன் அடைந்த பல ஆயிரம் இந்தியர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

மேலும் எச்.1 பி விசா உள்ளிட்ட விசாவின் ரினீவல் காலத்தை குறைத்து டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார். அங்கே வேலை அனுமதி வாங்கி விசா பெற்று பணியாற்றுபவர்களின் விசா காலாவதியாகிவிட்டால்.. 540 நாட்களுக்குள் அதை புதுப்பிக்க வேண்டும்.

அதுவரை தானாகவே அந்த விசா செயல்பட தொடங்கிவிடும். எச்.1 பி விசா உள்ளிட்ட விசாவின் ரினீவல் காலத்தை குறைத்து டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார். இதை 180 நாட்களாக டிரம்ப் குறைத்துள்ளார். அங்கே வேலை அனுமதி வாங்கி விசா பெற்று பணியாற்றுபவர்களின் விசா காலாவதியாகிவிட்டால் இனிமேல் 180 நாட்களுக்குள் அதை புதுப்பிக்க வேண்டும் என்று டிரம்ப் புதிய விதி கொண்டு வந்துள்ளார்.

கனடா விசா கட்டுப்பாடுகள்

கனடாவிலும் புதிய விசா நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் விசா status ஐ எந்த நேரத்திலும் மாற்றுவதற்கு தடையில்லா அதிகாரங்களை கனடா எல்லை அதிகாரிகளுக்கு வழங்கி அங்கே புதிய விதி கொண்டு வரப்பட்டு உள்ளது.

புதிய குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் யாருடைய விசா statusஐயும் இனி நீக்க முடியும். இனி எல்லை அதிகாரிகளே தற்காலிக குடியுரிமை ஆவணங்களை மறுக்க அல்லது நிராகரிக்க அதிகாரம் உள்ளது. இதனால் இந்தியர் ஒருவரின் விசாவை நீக்க எல்லை அதிகாரி நினைத்தால் எளிதாக செய்ய முடியும் .

More From
Prev
Next
English summary
USA and Canada are turning against India with their new VISA rules
Read Entire Article