அமெரிக்க அதிபர் டிரம்பின் ட்ரூத் சமூக ஊடக தளத்தில் இணைந்தார் பிரதமர் மோடி

1 day ago
ARTICLE AD BOX

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சொந்தமான ட்ரூத் சமூக ஊடக தளத்தில் பிரதமர் மோடி இணைந்துள்ளார். சமூக ஊடகங்களில் பெரிதும் ஆக்டிவாக இருப்பவர் பிரதமர் மோடி. எக்ஸ் சமூக ஊடகத்தில் 10 கோடிக்கும் மேற்பட்ட பாலோயர்களுடன், அதிக பாலோயர்களை கொண்ட உலக தலைவராக பிரதமர் மோடி உள்ளார். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகத்திலும் பலரும் பிரதமர் மோடியை பின்தொடர்கின்றனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சொந்தமான ட்ரூத் சமூக ஊடகத்தில் முதல் முறையாக பிரதமர் மோடி இணைந்துள்ளார்.

அதில் 2 பதிவுகளை அவர் வெளியிட்டுள்ளார். முதல் பதிவு, 2019ல் டெக்சாசில் அதிபர் டிரம்புடன் பங்கேற்ற ஹவுடி மோடி நிகழ்ச்சியின் புகைப்படத்தை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘‘ட்ரூத் சோஷியல் மீடியாவில் இணைந்தது மகிழ்ச்சி! இங்குள்ள அனைத்து உணர்ச்சிமிக்க குரல்களுடன் தொடர்பு கொள்ளவும், வரும் காலங்களில் அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபடவும் ஆவலுடன் உள்ளேன்’’ என கூறி உள்ளார். 2வது பதிவில், அமெரிக்க விஞ்ஞானியும், பிரபல பாட்கோஸ்டரான லெக்ஸ் பிரட்மேனுடனான தனது 3 மணி நேர பாட்கோஸ்ட் உரையாடல் நிகழ்ச்சியின் இணைப்பை பகிர்ந்துள்ளார்.

The post அமெரிக்க அதிபர் டிரம்பின் ட்ரூத் சமூக ஊடக தளத்தில் இணைந்தார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Read Entire Article