ARTICLE AD BOX
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்பு பதாகைகள் அகற்றியதால் கோவையில் பா.ஜ.க வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவையில் பீளமேடு பகுதியில் உள்ள பா.ஜ.க மாநகர தலைமை அலுவலகத்தின் புதிய கட்டிடம் மற்றும் ஈசா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவை வருகிறார்.
அவரை வரவேற்கும் விதமாக பா.ஜ.க வினர் மாநகர் முழுவதும் போஸ்டர்கள், கட்சி கொடிகள், பிளக்ஸ் பேனர்கள் வைத்து உள்ளனர்.
இந்நிலையில் பீளமேடு பகுதியில் பா.ஜ.க வின் புதிய அலுவலகம் அருகே வைத்து இருந்த வரவேற்பு பதாகைகளை அகற்றிய கோவை மாநகராட்சி ஊழியர்கள் அந்த பேனர்களில் இருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் புகைப்படத்தை குப்பை தொட்டியில் போட்டு உள்ளனர்.
இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த பா.ஜ.க வினர் பீளமேடு காவல் நிலையம் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தற்போது கோவை - அவிநாசி பிரதான சாலையில் உள்ள பீளமேடு காவல் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தற்பொழுது பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.