அப்பாடா.. வெயில் குறைய போகுதாம்! நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்! அப்போ சென்னை கிளைமேட் எப்படி?

10 hours ago
ARTICLE AD BOX

அப்பாடா.. வெயில் குறைய போகுதாம்! நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்! அப்போ சென்னை கிளைமேட் எப்படி?

Weather
oi-Vigneshkumar
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், இது தொடர்பாக வானிலை மையம் முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளது. வரும் நாட்களில் மழைக்கான வாய்ப்பு குறைவு என்ற போதிலும் அடுத்த இரு நாட்கள் வெப்பம் சற்று குறையவுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் உள் தமிழகம் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

Chennai weather Meteorological dept

மழை எங்கே?

அதிகபட்சமாகத் தென்காசி (தென்காசி), செங்கோட்டை (தென்காசி) தலா 40 மிமீ, தென்காசி AWS (தென்காசி), குண்டாறு அணை (தென்காசி) தலா 30 மிமீ, ஆயிக்குடி (தென்காசி), சேர்வலாறு அணை (திருநெல்வேலி), சிவகாசி (விருதுநகர்), பேச்சிப்பாறை AWS (கன்னியாகுமரி) தலா 20 மிமீ மழை பெய்துள்ளது. இது தவிர கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, தூத்துக்குடி பகுதிகளிலும் ஓரளவுக்கு மழை பெய்தது.

வெப்பம் எப்படி?

கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாகப் பெரிய மாற்றம் ஏதுமில்லை. அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2° செல்சியஸ் அதிகமாக இருந்தது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 34 - 37° செல்சியஸ் மற்றும் தமிழக கடலோர பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 32 - 35° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

வரும் நாட்களில் நிலவும் மழை தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென்னிந்தியப் பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வானிலை எப்படி இருக்கும்

மார்ச் 22 மற்றும் 23 தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 24ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 25ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 26ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

வெப்பம் குறைவு

அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை இன்றும் நாளையும் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. வரும் மார்ச் 22 முதல் 25 வரை அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும். இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை கிளைமேட்

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (20-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (21-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை.

More From
Prev
Next
English summary
Meteorological Department has predicted a drop in temperature in Tamil Nadu, despite no rainfall forecast (தமிழகத்தில் வரும் நாட்களில் குறையும் வெப்பம்): Temperature in tamil nadu will reduce in upcoming days.
Read Entire Article