அப்பா தப்பான அட்வைஸ் கொடுத்தார்.. முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்க பாக்குறாரு.. வனிதா பளீச்!

19 hours ago
ARTICLE AD BOX

அப்பா தப்பான அட்வைஸ் கொடுத்தார்.. முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்க பாக்குறாரு.. வனிதா பளீச்!

Throw Back Stories
oi-Jaya Devi
| Published: Sunday, March 2, 2025, 13:02 [IST]

சென்னை: பழம்பெரும் நடிகர் விஜயகுமார், முத்து கன்னு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் தன்னுடன் படங்களில் நடித்த நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்
முதல் மனைவி மூலம் விஜயகுமாருக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளார். விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதிகளுக்கு அனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என மூன்று மகள்கள் உள்ளனர். இதில் வனிதா குடும்பத்தைவிட்டு பிரிந்து தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், அண்மையில் வனிதா விஜயகுமார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில், அப்பா கொடுத்த ஒரு பேட்டியை நான் பார்த்தேன். அதில், என் பசங்க எல்லாருமே என் பேச்சை கேட்பாங்க என்று கவிதா அக்கா, அனிதா அக்கா பெயரை சொல்லிவிட்டு என் பெயரை மட்டும் சொல்லாமல் விட்டு விட்டார். அதைக்கேட்டு நான் சந்தோஷம் தான் பட்டேன். வனிதா மட்டும் தான் என் பேச்சை கேட்கமாட்டாள் என்று சொல்லி இருந்தால், நான் சத்தியமா கைதட்டி இருப்பேன். ஏன் என்றால், நான் அப்பா பேச்சை கேட்கவில்லை என்று எனக்கு நன்றாக தெரியுமா.

Vanitha Vijayakumar interview

தப்பான அட்வைஸ்: ஆனால், ஒரு தப்பான விஷயத்திற்கு அட்வைஸ் கொடுத்தா அதை நான் கேட்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அவருக்கு எது சரி என்று படுகிறதோ அது அவருக்கு சரியானது. ஆனால், எனக்கு தவறாக தெரியும் விஷயத்தை அவர் எப்படி எனக்கு அட்வைசாக கொடுத்தால் அதை நான் ஏன் கேட்க வேண்டும். அவர் பேசிய விஷயத்தை பலர் எனக்கு வீடியோவாக எடுத்து அனுப்பி இருந்தார்கள். ஒரு குடும்பத்தில் ஒருவர் இறந்து போய்விட்டால் கூட, அவர் பற்றி நாம கண்டிப்பா பேசுவோம். ஆனால், என் பெயரை அவர் சொல்லவே இல்லை. அப்படி சொல்லவில்லை என்றால், நான் அவரின் மகள் இல்லையா, அவர் யாரை ஏமாற்ற பார்க்கிறார். முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்க பாக்கிறார் என்று பேசி இருந்தார்.

Mrs and Mr: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பிஸ்னஸ் மற்றும் சினிமா என தொடர்ந்து படத்தில் நடித்து வருகிறார் வனிதா விஜயகுமார். நடிகையாக இருந்த வினிதா 'Mrs and Mr' படத்தை இயக்கி இயக்குநராக மாறி உள்ளார். இந்த படத்தில் ராபர்ட் மாஸ்டர் வனிதாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தை வனிதாவின் மகள் ஜோவிகா தயாரிக்க அதில், ஷகிலா, பாத்திமா பாபு, ஸ்ரீமன், செஃப் தாமு என பல நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகி படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Vanitha Vijayakumar interview

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்: இதற்கு காரணம் என்ன வென்றால், இரண்டு திருமணங்கள் முறிவுக்குப் பிறகு நடன இயக்குநர் ராபர்ட்டை நடிகை வனிதா விஜயகுமார் காதலித்து வந்ததாகக் கூறப்பட்டது. இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வதந்திகள் பரவின.ஆனால் காதல் கடைசியில் முறிந்துவிட்டதாகவும், அதன் பிறகு தான் வனிதா மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். காதலருடன் மீண்டும் படத்தில் நடித்துள்ளதால் இந்த படத்திற்கு எதிர்ப்பு அதிகமாக உள்ளது.

More From FilmiBeat

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Actress Vanitha Vijayakumar bold interview about father Vijaykumar bad advice,நடிகை வனிதா விஜயகுமார் தந்தை விஜய்குமார் கொடுத்த மோசமான அறிவுரையை நான் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என பேட்டியில் பேசி உள்ளார்
Read Entire Article