ARTICLE AD BOX
அப்படியே கயாடு லோஹர் பக்கம் போயிடாதீங்க.. திடீரென ரசிகர்களை சுண்டி இழுத்த மாளவிகா மோகனன்!
சென்னை: கடந்த ஆண்டு வெளியான தங்கலான் படத்திற்காக மாளவிகா மோகனன் பாராட்டுக்களை அள்ளினாலும் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை அந்த படமும் கொடுக்கவில்லை. ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்.
ஆனால், அந்த படத்தில் அவருடைய நடிப்பும் எக்ஸ்பிரஷனும் பங்கமாக ட்ரோல் செய்யப்பட்டது. தனுஷ் உடன் இணைந்து அவர் நடித்த மாறன் ஓடிடியில் வெளியாகி அப்படியொரு படம் வெளியானதா என்பதே பலருக்கும் தெரியாதபடி மாறியது.

தமிழ் சினிமாவில் கண்டிப்பாக தனக்கான இடத்தை பிடித்து விட வேண்டும் என்கிற குறிக்கோளுடன் சர்தார் 2 படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கூட டிராகன் ஹீரோயின் கயாடு லோஹர் தட்டித் தூக்கி சென்று விடக் கூடாது என்கிற முடிவுடன் அதற்கு முடிவுகட்ட அசத்தலான கவர்ச்சி போட்டோக்களை அருவி அருகே நின்றபடி எடுத்து வெளியிட்டு இணையவாசிகளை இம்சைப்படுத்தி வருகிறார்.
டிரெண்டிங்கில் கயாடு லோஹர்: மலையாளம், தெலுங்கு மற்றும் மராத்தி மொழி படங்களில் நடித்து வந்த கயாடு லோஹர் கடந்த வாரம் வெளியான பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தில் நடித்த நிலையில், சோஷியல் மீடியா முழுவதுமே கடந்த ஒரு வாரமாக ரசிகர்கள் கயாடு லோஹர் ஆர்மியாகவே மாறிவிட்டனர். அதற்கு ஏற்றார்போல அவரும் தான் தமிழ் பொண்ணு என்பது போலவே தமிழில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதும் ரசிகர்களை கவரும் வீடியோக்களை வெளியிடுவதுமாக அட்ராசிட்டி செய்து வருகிறார். டிராகன் படத்தை தொடர்ந்து இதயம் முரளி படத்திலும் அவர் தான் ஹீரோயின் என்பதால் மேலும், பல இயக்குநர்களும், நடிகர்களும் கயாடு லோஹர் மீது கண் வைத்து வருகின்றனர்.

லோ ஹிப் ஹாட்னஸ்: நடிகைகள் இடுப்புக்கு கீழே ஆடையை இறக்கி கட்டி போஸ் கொடுத்தாலே பசங்க வீக்காகிடுவாங்க என்பதை புரிந்துக் கொண்டே அட்டாக் செய்யும் விதமாக அருவி அருகே சிகப்பு நிற சட்டையும் பாவாடையும் அணிந்துக் கொண்டு செம ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார் மாளவிகா மோகனன்.

நீங்க வேறலெவல்: தமிழ் படங்களில் நடித்து மாளவிகா மோகனன் டிரெண்டானதை விட இன்ஸ்டாகிராமில் அவர் போட்டோக்களை வெளியிட்டுத்தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளார். மீண்டும் அவரது போட்டோக்கள் வெளியான நிலையில், கயாடுலாம் யாருங்க, நீங்க வேறலெவல் தலைவி என ரசிகர்கள் கமெண்ட்டுகளை பறக்கவிட ஆரம்பித்துவிட்டனர்.

இடுப்புச் சங்கிலி: ரம்யா பாண்டியன் இடுப்புச் சங்கிலியுடன் போட்டோ வெளியிட்டு இணையத்தை ஹீட்டாக்கியதை போல தற்போது கழுத்து முதல் இடுப்பு வரை சங்கிலி ஒன்று மாளவிகா மோகனன் உடல் முழுவதும் டிராவல் ஆவதை பார்த்து ரசிகர்கள் சொக்கிப் போயுள்ளனர்.