ARTICLE AD BOX
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
ஞாயிற்றுக் கிழமையானால் வீட்டில் எனக்கு 5 ரூபாய் கொடுப்பார்கள்…
இது 1973இல் நான் தனியாகச் சம்பாதிக்கும் வரை தொடர்ந்தது. அன்றைய 5 ரூபாயின் மதிப்பு இன்றைய 500 ரூபாய்க்கு மேல்..
ஸ்கூலுக்கு செல்லும் நேரம் தவிரத் தினமும் Turkey red oil தயாரிக்கும் வேலை இரண்டு மூன்று மணி நேரம் தினமும் இருக்கும். 5 கிலோ டின்களில் சலவை ஆலைகளுக்கு டர்கிரெட் ஆயிலை எடுத்துச் செல்வேன். அப்பொழுதெல்லாம் ஆசிட் சிலரி வரவில்லை. பின் அடுத்த ஆண்டு ஆசிட் சிலரி வந்தவுடன் சலவை ஆலைகளுக்கு டெண்டர் ஜெண்ட் லிக்யூடை கொடுக்க ஆரம்பித்தோம்.
ஆசிட் சிலரியை ஒரு பிளாஸ்டிக் டிரமில் ஊற்றி கிளபர்ஸசால்ட் கரைசலை அதில் மெதுவாக ஊற்றி மர கோலில் கலக்க வேண்டும். பின் யூரியா தகுந்த அளவு போட்டுக் கலக்கினால் நுரை பொங்கும் 50 கிலோ டிடர்ஜெண்ட் லிக்யூட் அரை மணி நேரத்தில் ரெடி…

ஞாயிற்றுக் கிழமை மதியம் 3 வரை வேலை இருக்கும். இது சைசிங் மில்களுக்கும் பஞ்சாலைகளில் பஞ்சை வெண்மையாக்கவும் சலவை ஆலைகளுக்கு வெட்டிங் அவுட் ஏஜென்டுகளாவும் செயல்பட்டது. பனியன் துணிகளை நனைத்து பெரிய தகர டேங்ககில் துணியைப் போட்டு பெரிய அடுப்பில் காஸ்டிக் சோடாவை போட்டு பெரிய அடுப்பில் விறகைப் போட்டு எரித்து, 12 மணி நேரம் கொதிக்க வைத்து பின் பெரிய சிமிட் தொட்டிகளுக்கு மாற்றி நீரில் அலாசி பிளிச்சிங் பவுடரில் நனைத்து சிமிட் தொட்டியுடன் இணைந்திருக்கும் கல்லில் துவைத்து அலாசி நீலமிட்டு பனியன் துணிகளை வெண்மையாக்குவர். வின்ச்சோ சாப்ட்ஃப்ட் ப்ளோ மிஷின்கள் வரும்வரை இது மாதிரி கையாலேயே பனியன் துணிகளை ப்ளீச்சிங் செய்தார்கள்.
Turkey red oil-ன் மூலப் பொருட்கள் விளக்கெண்ணெய்யும், சல்பருமாகும். Turkey red oil என்பதன் காரணப் பெயர் துருக்கி ரெட் ஆயில் துருக்கியில் சிகப்பு சாயம் போடவும் பயன்பட்டது.
அன்றெல்லாம் விளக்கெண்ணெய் 15 கிலோ கொண்ட டின்னே 20 ரூபாய்தான். மரத்தால் செய்யப்பட்ட பெரிய பீப்பாயில் கீழ் பகுதியில் சிறிய துளை இருக்கும். இதை கார்க்கை கொண்டு அடைத்து விடுவோம். இதுபோல் ஐந்தாறு பீப்பாயிகள் இருக்கும். இதில் இரண்டு டின் விளக்கெண்ணெய்யை ஊற்றி பழைய குளுக்கோஸ் பாட்டிலிலை தலைகீழாகத் தொங்க விட்டு சல்பரை சொட்டுச் சொட்டாக விட்டு மரத்தடியில் கலக்க வேண்டும். இதற்கு இரண்டு மணி நேரமாகும். 3 பீப்பாய்கள் கலக்க மதியம் 3 மணியாகும்..
மீண்டும் அடுத்த நாள் காலையில் உப்பு கரைசல் நீரை விட்டுக் கலக்கி மீண்டும் அடுத்த நாள் மரப்பீப்பாயின் கீழே உள்ள கார்க்கை திறந்து விட்டு உப்பு கரைசல் நீரை மட்டும் வெளியேற்றி விட்டால் டர்கி ரெட் ஆயில் ரெடி..

திருப்பூர் இன்றைய நிலையை அடைய முன்னோடியாக உழைத்த நூறு குடும்பங்களில் எங்களின் குடும்பமும் ஒன்று.
ஞாயிற்றுக் கிழமைகளில் மதியம் 3 மணிக்கு ரெடியாக ஆரம்பிப்பேன்.. அன்று அயர்ன் பாக்ஸ் பெரிய அளவில் வீட்டு பயன்பாட்டுக்கு வரவில்லை.. துணிகளை என் நண்பன் சுப்பனிடம் கொடுத்து தேய்ப்பேன். அன்றெல்லாம் துணி தேய்க்க 5 பைசா தான். அன்று 5 பைசாவுக்கு ஒரு சாதா டீயும் (கரும்பு சர்க்கரை டீ) ஒரு வெங்காய போண்டாவும் சாப்பிடலாம்.
சில சமயம் என் நண்பன் சுப்பன் நொய்யல் ஆற்றுக்குத் துணி துவைக்கப் போயிருந்தால் வீட்டிலேயே அயர்ன் செய்து கொள்வேன். எங்கள் வீட்டில் குளிக்கச் சுடு நீருக்கு பாய்லரும். சமையலுக்கு குமுட்டி அடுப்பும் இருந்தன ஆகவே கரி மூட்டையாக வாங்கி விடுவோம்..

பழைய அலுமினிய பிளேட்டில் கரிகளை நெருப்பிட்டு சட்டை பேண்ட்டுகளை அயர்ன் செய்து கொள்வேன். சரியாக 5 மணிக்கு நண்பன் கனகராஜன் உடனோ சீனிவாசன் உடனோ கணேசன் உடனோ அல்லது எல்லோருமோ நடந்தே புறப்பட்டு விடுவோம்.
சினிமா சேர் டிக்கெட் 90 பைசா தான். இண்டர்வலில் டீ சாப்பிட்டால் டீ ஒன்று 5 பைசா தான். சினிமா விட்ட உடன் நடந்தே சப்பாத்தி ஸ்டால் சென்று ஆளுக்கு நான்கு சப்பாத்தி சாப்பிட்டு பாதாம் போட்ட மசால் பால் சாப்பிட்டால் ஆளுக்கு 80 பைசா தான் வரும். இருவருக்கு சினிமா டிபன் போக 5 ரூபாயில் மீதி ஒரு ரூபாய் இருக்கும்!
நன்றி,
சுதா மோகன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks