அனைத்து கட்சிக் கூட்டம்.. பாமக பங்கேற்பு.. புதிய தமிழகம் மறுப்பு..!

18 hours ago
ARTICLE AD BOX

அனைத்து கட்சிக் கூட்டம்.. பாமக பங்கேற்பு.. புதிய தமிழகம் மறுப்பு..!

Anbumani
தமிழக முதல்வர் கூட்டவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பாமக பங்கேற்கும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொகுதி மறுவரையறை காரணமாக தமிழகத்தில் எட்டு தொகுதிகள் குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தமிழக முதல்வர் கூறியுள்ளார். இதை பற்றிய ஆலோசனைக்காக அனைத்து கட்சி கூட்டத்தை அவர் அழைத்துள்ளார். இந்த கூட்டம் மார்ச் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஏற்கனவே, இந்த கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாமக அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பதாகவும், தமிழகத்தின் உரிமைகளை இழந்து விடக்கூடாது என்றும் நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை தொடர்பாக தமிழக அரசு நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால், அதே நேரத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடங்காத நிலையில், தமிழகத்தில் தொகுதி எண்ணிக்கை குறையும் என்பதற்கு எந்த அடிப்படை இருக்கிறது என்பதை சந்தேகமாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மொழியை வைத்து அரசியல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், தொகுதி மறுவரையறை பிரச்சனையை முதல்வர் எழுப்பி இருப்பதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran
Read Entire Article