அனுபவம் வேண்டாம்.. ஐடி நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. மதுரையில் பணி நியமனம்

3 hours ago
ARTICLE AD BOX

அனுபவம் வேண்டாம்.. ஐடி நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. மதுரையில் பணி நியமனம்

Jobs
oi-Nantha Kumar R
Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு முன்அனுபவம் இல்லாதவர்கள் கூட விண்ணப்பம் செய்யலாம்.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட முக்கிய நகரங்களில் ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் மதுரையில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

it jobs job jobs

மதுரையில் SaaSForest Infotech Private Ltd எனும் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஐடி நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் முக்கிய விவரங்கள் வருமாறு:

தற்போதைய அறிவிப்பின்படி அந்த நிறுவனத்தில் க்யூஏ டெஸ்டர் (QA Tester) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு சம்பந்தப்பட்டி பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். இருப்பினும் அவர்களுக்கு சில தகுதிகள் என்பது வேண்டும்.

சென்னையை விடுங்க.. திருச்சியில் IT வேலை வேண்டுமா? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!
சென்னையை விடுங்க.. திருச்சியில் IT வேலை வேண்டுமா? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

அதன்படி மேனுவல் டெஸ்ட்டிங் (Manual Testing)பற்றிய நல்ல அறிவு இருக்க வேண்டும். டெஸ்ட் கேசஸ் ரைட் மற்றும் எக்ஸிக்கியூட் திறமை இருக்க வேண்டும். எஸ்டிஎல்சி (SDLC) பற்றிய புரிதல் இருப்பதோடு, Bug டிராக்கிங் டூல்ஸ் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் ஆட்டோமேஷன் எக்ஸ்பிரியன்ஸ் இருப்பதோடு Cypress பற்றி தெரிந்திருந்தால் அது விண்ணப்பம் செய்வோருக்கு பிளஸ் பாயிண்ட்டாகும்.

"வீட்டில் இருந்தே வேலை".. ரூ.4 லட்சம் முதல் ரூ.34 லட்சம் வரை சம்பளம்! சூப்பர் சான்ஸை மிஸ் பண்ணாதீங்க

இந்த பணிக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த விபரம் எதுவும் தற்போதைய அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம்.

Work From Home.. அனுபவம் வேண்டாம் + ரூ.65,000 வரை சம்பளம்.. ஐடி நிறுவனத்தில் 5 பிரிவில் வேலைவாய்ப்பு
Work From Home.. அனுபவம் வேண்டாம் + ரூ.65,000 வரை சம்பளம்.. ஐடி நிறுவனத்தில் 5 பிரிவில் வேலைவாய்ப்பு

பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் உள்ள SaaSForest Infotech Private Ltd நிறுவனத்தில் நியமனம் செய்யப்படுவார்கள். இந்த பணி பற்றிய அறிவிப்பு வெளியாகி 3 நாள் ஆகிவிட்டது. விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இந்த பணியை விரும்புவோர் தங்களின் ரெஸ்யூம் உள்பட பிற விபரங்களை [email protected] என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
English summary
Madurai IT Jobs 2025: SaaSForest infotech Private Ltd hiring for QA Tester. 0 - 2 years experience candidates can be apply for this job. Selected candidates will be appointed in Madurai.
Read Entire Article